வரும் 28-ம் தேதி நடக்கவிருந்த திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து : அரசியல் கட்சிகள் வரவேற்பு

திருப்பரங்குன்றம் தவிர திருவாரூர் உள்பட 19 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்தப்படாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

திருப்பரங்குன்றம் தவிர திருவாரூர் உள்பட 19 தொகுதிகளுக்கும் ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்தப்படாது என தலைமை தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜன.,28-ம் தேதி நடக்க இருந்த திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், திருவாரூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது ஏன் என தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதில், திருப்பரங்குன்றம் தவிர மீதமுள்ள திருவாரூர் உள்ளிட்ட 19 தொகுதிகளில் ஏப்ரல் மாதம் வரை இடைத்தேர்தல் நடத்தப்படாது. ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என தமிழக அரசு கேட்டுக் கொண்டது. கஜா புயல் நிவாரண பணிகளை சுட்டிக்காட்டி, டிசம்பர் 3-ம் தேதி தமிழக தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் கடிதம் எழுதி இருந்தார். திருப்பரங்குன்றம் தவிர 19 தொகுதிகளுக்கு ஏப்ரல் வரை இடைத்தேர்தல் நடத்த வேண்டாம் என அவர் கோரிக்கை வைத்திருந்தார். 

அதேபோல, அ.தி.மு.க., தி.மு.க., காங்., பா.ஜ.க., தே.மு.தி.க., மா.கம்யூ உள்ளிட்ட கட்சிகள் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என அனைத்துக் கட்சி கருத்துக் கேட்புக் கூட்டத்தில் கூறி இருந்தன. தேர்தலை தள்ளி வைக்கமாறு அரசியல் கட்சிகள் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் கோரிக்கை அளித்திருந்தன.

தேர்தலில் ஈடுபட வேண்டிய அதிகாரிகள்தான் புயல் நிவாரண பணிகளிலும் ஈடுபட வேண்டி இருக்கிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. மாவட்ட தேர்தல் அதிகாரி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையிலேயே திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது, இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதனிடையே, தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு கட்சியினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். தேர்தல் ரத்து குறித்து அரசியல் கட்சிகளின் கருத்து பின்வருமாறு :- 

தமிழக பா.ஜ.க., தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது :- திருவாரூர் தொகுதி இடைத்தேர்தல் ரத்து சரியான நடவடிக்கை தான். எனது சொந்த கருத்தின் அடிப்படையிலேயே திருவாரூர் இடைத்தேர்தல் நடக்கலாம், நடக்காமல் போகலாம் என்றேன்.

காங்கிரஸ் கட்சியின் பீட்டர் அல்போன்ஸ் கூறுகையில், "திருவாரூர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது. பொன். ராதாகிருஷ்ணனும், தமிழிசை சவுந்தரராஜனும் முதலமைச்சரை சந்தித்த போதே தேர்தல் ரத்து முடிவாகி விட்டது. அந்த முடிவை தான் தேர்தல் ஆணையம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது," என்றார்.

அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பேசியதாவது:- தேர்தல் ரத்து ஏமாற்றமளிக்கிறது. தேர்தல் எதிர்கொள்ள இன்முகத்துடன் காத்திருந்த நிலையில், ரத்து செய்யப்பட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது, எனக் கூறினார்.

அமைச்சர் சி.வி.சண்முகம் :- மக்களை தேர்தலுடன் சேர்த்து தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளது, என்றார்.

அ.ம.மு.க. வேட்பாளர் எஸ்.காமராஜ் : தேர்தல் ரத்து செய்யப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது, எனக் கூறினார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறுகையில், "கஜா புயலால் பாதிக்கப்பட்ட திருவாரூர் தொகுதியில் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது," என்றார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...