தடாகம் அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநர் தலையில் கல்லைப் போட்டு கொலை : போலீசார் விசாரணை

கோவை : தடாகம் அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : தடாகம் அருகே பொக்லைன் இயந்திர ஓட்டுநரின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த சம்பவம் தொடர்பாக, குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

துடியலூர் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் ஊராட்சியைச் சேர்ந்த பாப்பநாயக்கன்பாளையம் மேட்டுத்தோட்டத்தை சேர்ந்தவர் ஆனந்தகுமார் (33). இவர் பொக்லைன் இயந்திர ஓட்டுநராகப் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில், நேற்று காலை முனியப்பன் கோயில் அருகே உள்ள ஒரு வீதியில் தலை நசுங்கி, ரத்தம் வழிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தடாகம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். 

இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தடாகம் போலீஸார், ஆனந்தகுமாரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மர்மநபர்களால் தலையில் கல்லை போட்டு ஆனந்தகுமார் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆனால், இவரை கொலை செய்த மர்மநபர்கள் யார் எனத் தெரியவில்லை. அவர்களின் அடையாளம் கண்டறிய அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இது தொடர்பாக தடாகம் போலீஸார் கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...