திருப்பூர் : கிராமப்புறங்களில் பெருகி வரும் ஆங்கிலப்பள்ளிகளால், 50 ஆண்டுகளுக்குப் பிறகு எழுத்து மொழியாக உள்ள தமிழ் பேச்சு மொழியாகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுவதாக திருப்பூரில் கவிஞர் வைரமுத்து கூறியுள்ளார்.

திருப்பூரில் வெற்றித்தமிழர் பேரவை சார்பில் கவிக்கோ அப்துல்ரகுமானின் கவிதைகளைப் பறைசாற்றும் வகையிலான தமிழாற்றுப்படை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மலேசியாவின் முன்னாள் அமைச்சர் டத்தோ சரவணன், தி.மு.க.வின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.

நிகழ்ச்சியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி பேசிய போது கலைஞர் கருணாநிதியுடன் கவிஞர் வைரமுத்துவுக்குமான நட்புறவைப் பற்றி பேசினார். அப்போது, மேடையில் அமர்ந்திருந்த கவிஞர் வைரமுத்து பலமுறை கண்ணீர் வடித்து அழுத நிகழ்வு நிகழ்ச்சியில் இருந்த அனைவரையும் நெகிழச்செய்தது. இதைத் தொடர்ந்து, இதுவரை கவிஞர் கரங்களால் வெளியிடப்பட்ட தனது நூல்கள், இனி அவரது காலடிகளில் வைத்து வெளியிடப்படும் என கவிஞர் வைரமுத்து தெரிவித்தார்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த போது கவிஞர் வைரமுத்து பேசியதாவது :- தற்போது தமிழினமே தமிழ் மொழி மீது நம்பிக்கை கொள்ளவில்லை எனில், எந்த இனம் நம்பிக்கை கொள்ளும். முதலில் பெற்றோர்கள் தமிழின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பெருகிவரும் ஆங்கிலவழி பள்ளிகளால், தற்போது எழுத்து மொழியாகவும், பேச்சுமொழியாகவும் உள்ள நம் மொழி, 50 ஆண்டுகளுக்குப் பிறகு வெறும் பேச்சுமொழியாக மட்டும் ஆகிவிடுமோ என்ற அச்சம் ஏற்படுகிறது. தமிழ் வழி கல்வி கற்பதும், தமிழ் மொழியைக் கட்டாயம் கற்பதும், தமிழ் மொழியின் மீது நம்பிக்கை கொள்வதும் நம் தலையாய கடமை. அதனை சட்டத்தின் மூலம் சாத்தியமாக்க முடியுமென்றால், அதன்வழி ஆழ்ந்து சிந்திக்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, தி.மு.க.வின் ஆதரவு நிகழ்ச்சிகள் பலவற்றில் கவிப்பேரரசு வைரமுத்து கலந்துகொண்டிருந்தாலும் கூட, நேரடியாக அரசியலில் வைரமுத்து ஈடுபடவில்லை. ஆனால், மேடையில் பேசிய மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, அரசியலுக்கு வருவது அவருடைய விருப்பம். ஆனால், பெரியாரை உணர்ந்துகொண்ட ஒரு கவிஞர், சமூகத்தின் உண்மைகளை தைரியமாக எதிர்த்து மக்களின் இதயத்தோடு பொருந்தக்கூடிய மொழியிலே பேச உங்களைப்போன்ற ஒருவர் வேண்டும். வாளெடுத்து வாருங்கள், உங்களோடு நிற்கிறோம் எனப் பேசி சூசகமா கவிஞர் வைரமுத்துவை அரசியலுக்கு அழைத்தார்.