கள்ளக் காதல் கைகூட ஜோதிடத்தை நம்பி, இன்று கம்பி எண்ணும் திருப்பூர் அக்கவுன்டென்ட் - அதிர்ச்சி வாக்குமூலம்

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பூங்கா அருகே கடந்த 24ம் தேதி கிளிஜோதிடர் ரமேஷ் ஹெல்மட் அணிந்த மர்ம நபரால் கொடுராமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள் சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது.

திருப்பூர் குமரன் சாலையில் உள்ள பூங்கா அருகே கடந்த 24ம் தேதி கிளிஜோதிடர் ரமேஷ் ஹெல்மட் அணிந்த மர்ம நபரால் கொடுராமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகள்  சமூக வளைதளங்களில் வைரலாக பரவியது. 

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட திருப்பூர் வடக்கு போலிசார் கடந்த ஆண்டு இடுவம் பாளையம் பகுதியில் ஜோதிடர் ரமேஷை தாக்கிய அக்கவுண்டன்ட் ரகுவின் மீது தங்கள் சந்தேக பார்வையை கொண்டு சென்றனர். அதன்படி நாகப்பட்டினம் மாவட்டம் குத்தாலம் பகுதியை சேர்ந்த ரகுவின் வீட்டிற்க்கும் தனிப்படை போலிசார் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டதில் ரகு தலைமறைவானது தெரியவந்தது. 

இதனையடுத்து தனிப்படை போலிசார் ரகுவை தீவிரமாக தேடிவந்த நிலையில் 26ம் தேதி ரகு சென்னை அம்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதனையடுத்து, கோவை மத்திய சிறையில் ரகு அடைக்கப்பட்டார். இதனையடுத்து ஜனவரி 3ம் தேதி அன்று போலிசார் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது ரகு கூறிய தகவல் போலிசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

திருப்பூர் பனியன் நிறுவனத்தில் அக்கவுண்டன்ட் ஆக பணிபுரிந்த ரகு, கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் அனுப்பர்பாளையம் பகுதியில் தனது மனைவி குழந்தைகளுடன்  குடியிருந்த போது பக்கத்து வீட்டில் குடியிருந்து வந்தவரின் மனைவி மோகனப்பிரியா மீது ரகுவுக்கு காதல் ஏற்பட்டுள்ளது. அவரை மயக்க முடிவெடுத்த ரகு கிளிஜோதிடர் ரமேஷின் உதவியை நாடியுள்ளார். ரமேஷிம் 50 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு வசியம் செய்து தந்துள்ளார். இது நடந்த ஒரே வாரத்தில் ரகுவிற்கு மோகனப்பிரியாவுடன் காதல் மலர்ந்துள்ளது. இதனால் கிளிஜோதிடரின் வசியம் பலித்துவிட்டதாக நம்பி ரகு தனது குடும்பத்தை சொந்த ஊருக்கு அனுப்பி விட்டு தனது காதலியுடன் மயிலாடுதுறையில் தனியாக வீடு எடுத்து வாழ்ந்து வந்துள்ளார். 

இவர்களை தேடி வந்த மோகனப்பிரியாவின் குடும்பத்தினர் மயிலாடுதுறையில் உள்ள இவர்களை கண்டறிந்து அனுப்பர்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு மோகனப்பிரியா மீண்டும் தனது கணவருடன் செல்ல சம்மதித்ததால் ரகுவிடம் இருந்து பிரித்து அனுப்பினார்கள்.

 இதனால் மனமுடைந்த ரகு மீண்டும் கிளிஜோதிடர் ரமேஷை தொடர்பு கொள்கிறார். இந்த முறை இரண்டரை லட்சம் வரை பெற்ற ரமேஷ் தனக்கு வசியம் செய்து தரவில்லை என வாக்குவாதத்தில் கடந்த ஆண்டு ரமேஷை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். 

இது குறித்து மங்கலம் காவல் நிலையத்திலும் கிளிஜோதிடர்

ரமேஷ் புகார் அளித்துள்ளார். இதில் காயமடைந்த ரமேஷ் சிகிச்சைக்கு பிறகு கடந்த இரண்டு மாதங்களாக மீண்டும் பணிக்கு திரும்பியுள்ளார். 

இந்த பிரச்சனைக்கு பின்னர் தென்னாப்ரிக்கா சென்ற ரகு அங்கு ஒன்றறை லட்ச ரூபாய் சம்பளத்தில் பணியில் சேர்ந்துள்ளார். எனினும் தனது காதலியின் நினைவு வாட்டவே ஒரு மாத சம்பளம் கூட வாங்காமல் அங்கிருந்து மீண்டும் தமிழகம் வந்துள்ளார். திருச்சியில் பணியில் சேர்ந்த ரகு அங்குள்ள வழிப்போக்கு ஜோதிடரிடம் தனது கதையை கூறியுள்ளார். அதற்கு அவர், முதலில் வசியம் செய்த ஜோதிடர் ரகுவை ஏமாற்றி விட்டதாகவும், அந்த பெண்ணிற்கு தவறான வசியம் வைத்து விட்டதாகவும் அதனால் தான் அவர் காதலி விட்டு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்துள்ளார். 

இதனால் ஆத்திரமடைந்த ரகு, பணத்தையும் பெற்றுக் கொண்டு ஜோதிடர் தன்னை ஏமாற்றி விட்டதால் ஜோதிடரை கொல்ல திட்டம் தீட்டினார். அதன்படி டிசம்பர் மாதம் 23ம் தேதி திருப்புர் வந்த ரகு ஜோதிடரை கண்காணித்துள்ளார், பின்னர் 24ம் தேதி மதியம் ஜோதிடர் சாப்பிட்டு விட்டு வெளியே வந்து அந்த பகுதியில் சுற்றிக் கொண்டிருந்த போது தான் மறைத்து வைத்திருந்த அரிவால் மூலம் ரமேஷை வெட்டி கொன்றதாகவும் அடையாளம் தெரியாமல் இருக்க ஹெல்மட் அணிந்து வெட்டியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கொலை செய்து விட்டு கத்தியை நொய்யல் ஆற்றங்ரையில் வீசிவிட்டு உடைகளை மாற்றிக் கொண்டு பஸ் மூலம் தப்பி சென்றதாக கூறியுள்ளார். பின்னர் போலிசார் தன்னை தேடி தனது வீடு வரை வந்ததால் வேறு வழியின்றி நீதிமன்றத்தில் சரணடைந்ததாகவும் வாக்கு மூலம் அளித்துள்ளார். 

இதனையடுத்து கொலை செய்ய பயன்படுத்திய அரிவாள், இருசக்கர வாகனம் மற்றும் ஹெல்மட்டை போலிசார் பறிமுதல் செய்தனர். போலிஸ்காவல் முடிவடைந்த நிலையில் ரகுவை  மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். வழிப்போக்கு ஜோதிடர் கூறியதை நம்பி மற்றொரு ஜோதிடரை அக்கவுண்டன்ட் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...