"மக்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வு", கோவை விழா குறித்து மைசூர் சாம்ராஜ்யத்தின் மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் பெருமிதம்

கோவை : கோவை விழாவின் ஒரு பகுதியாக பந்தய சாலை பகுதியில் நடைபெற்ற கலாச்சார பேரணியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.


கோவை : கோவை விழாவின் ஒரு பகுதியாக பந்தய சாலை பகுதியில் நடைபெற்ற கலாச்சார பேரணியில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலாச்சார நிகழ்ச்சிகளை பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



கோவையின் ஒருமைப்பாட்டை விளக்கும் வகையில் பன்முக கலாச்சார பேரணியானது இன்று பந்தய சாலை பகுதியில் நடைபெற்றது. தொழில் நகரமான கோவையில் நாட்டின் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வசிக்கக்கூடிய சூழலில் அனைத்து மாநிலங்களின் கலாச்சார பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் இந்த பேரணி நடைபெற்றது.



பந்தய சாலை பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பு வளாகம் முன்பாக மைசூர் மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் பேரணியை துவக்கி வைத்தார். தமிழக பாரம்பரிய கலைகளான மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையாட்டம், சிலம்பாட்டம், உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளுடன் பேரணி துவங்க கேரள செண்டை மேளம், கர்நாடகத்தின் பாரம்பரிய நடனம், பஞ்சாபி நடனம் என பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய நிகழ்ச்சிகளுடன் இந்த பேரணி நடைபெற்றது. 



மைசூர் சாம்ராஜ்யத்தின் 27வது வாரிசுதாரர் மகாராஜா மகாராஜா யதுவீர் கிருஷ்ணதத்தா சாம்ராஜ உடையார் விழாவில் பங்கேற்றவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: "பல்வேறு கலாச்சாரங்களை கொண்டது நமது பாரத நாடு. பாரம்பரியத்தை நமது முன்னோர்களால் கடைபிடித்ததை நம் குழந்தைகளும் கொண்டாட வேண்டும். பல்வேறு பிரிவுகளாக உள்ளவர்களை ஒருங்கிணைக்கும் நிகழ்வாக இந்த கோவை விழா அமைந்துள்ளது. ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் வகையில் இந்த விழா கொண்டாடபடுகிறது. இதில் பங்கேற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி, வரும் காலங்களில் கோவை விழாவில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன்" என கூறியவர் ஒவ்வொரு மாநிலங்களின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை தெரிந்து கொள்ள இது தனக்கு கிடைத்த நல்ல ஒரு வாய்ப்பாக அமைந்தது என தெரிவித்தார்.



கோவையைச் வசிக்கும் வேற்று மாநிலத்தவர் உட்பட 22 அமைப்புகள் சார்பில் நடத்தப்பட்ட இந்த பேரணியில் பல்வேறு பள்ளி, கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினரும் ஆர்வமுடன் பங்கேற்றனர். பந்தயசாலை சுற்றி 3 கி.மீ தூரத்திற்கு இந்த பேரணியானது நடைபெற்றது.

இந்த பேரணியில் கலந்து கொண்டு இருப்பது தங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இருப்பதாக பேரணியில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.இந்த பேரணியை ஏராளமான பொது மக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.



கோவையின் சிறப்பை எடுத்துக்கூறும் வகையில் பலவேறு அமைப்புகள் சார்பில் ஆண்டுதோறும் கோவை விழாவானது நடத்தப்பட்டு வருகிறது. பதினோராவது ஆண்டு கோவை விழா கடந்த நான்காம் தேதி துவங்கி வரும் 12 ம் தேதி வரை நடைபெறுகின்றது் இவ்விழாவில் சுமார் 100 இடங்களில் 130 நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டு தினந்தோறும் பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுடன் கோவை விழா நடைபெற்று வருகிறது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...