டெண்டர் முறைகேடு வழக்கு : கோவை மாநகராட்சியை தானாக முன்வந்து எதிர்மனுதாரராக சேர்த்தது உயர்நீதிமன்றம்

கோவை : மாநகராட்சிகளில் விடப்படும் டெண்டர்களில் முறைகேடு நிகழ்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை : மாநகராட்சிகளில் விடப்படும் டெண்டர்களில் முறைகேடு நிகழ்ந்ததாக தொடரப்பட்ட வழக்கில், வரும் 23-ம் தேதிக்குள் பதிலளிக்குமாறு கோவை மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர் வழங்கியதில் அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாகப் புகார் எழுந்தது. இது தொடர்பாக ஆளுநர் ஒப்புதல் பெற்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக ஊழல் வழக்கு பதியக்கோரி அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- சென்னை, கோவை மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் ஒதுக்கப்பட்டுள்ள பெரும்பாலான டெண்டர்கள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் பினாமிகள் மற்றும் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் முறைகேடாக வழங்கப்பட்டு உள்ளன. இதன்மூலம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பல கோடி ரூபாய் டெண்டர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 12-ம் தேதி உரிய ஆதாரங்களுடன் சி.பி.ஐ. மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, தமிழக ஆளுநரிடம் முறையாக அனுமதி பெற்று லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும். இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைத்து உத்தரவிட வேண்டும், இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாரயணன் மற்றும் ராஜமாணிக்கம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களும் முன்வைக்கப்பட்டன. சென்னை மாநகராட்சியில் சாலை அமைக்கும் பணிகள் முறையாக நடக்கவில்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், மனு மீது ஜனவரி 23-ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக தலைமைச் செயலாளர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் தமிழக நகராட்சி நிர்வாக செயலர், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளையும் தாமாக முன்வந்து எதிர்மனுதாரர்களாக நீதிமன்றம் சேர்த்துக் கொண்டது. 

இது தொடர்பாக, அறப்போர் இயக்கத்தின் நிர்வாக இயக்குநர் ஜெயராம் வெங்கடேசன் பேசுகையில்,"மாநகராட்சியில் நடைபெற்ற டெண்டர் முறைகேட்டில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் 4 நிறுவனங்களுடன் அவருக்கும் இருக்கும் தொடர்பு வெளிக் கொண்டு வந்தபிறகு, ஊழல் மற்றும் கண்காணிப்பு இயக்குநரகத்திடம் அனைத்து ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ஆனால், தற்போது வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

இதனால், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் முறையே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், தமிழக தலைமைச் செயலாளர், சி.பி.ஐ., அமைச்சர் வேலுமணி ஆகியோர் மீது புகார் குற்றச்சாட்டுகளை முன்வைத்தோம். ஆனால், நீதிமன்றம், தமிழக நகராட்சி நிர்வாக செயலர், சென்னை மற்றும் கோவை மாநகராட்சிகளையும் தாமாக முன்வந்து சேர்த்துக் கொண்டது. மேலும், பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்புயிள்ளது," என்றார். 

இதனிடையே, டெண்டர் விடுவதில் மிகப்பெரிய தொகை முறைகேடு நடந்துள்ளதால், நீதிமன்றத்தின் கண்காணிப்பில், சுதந்திரமான விசாரணை நடைபெறும் விதமாக, சிறப்பு விசாரணை குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என தொண்டு நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...