மேட்டுப்பாளையத்தில் கூலி தொழிலாளர்களுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆறுதல்

கோவை : மேட்டுப்பாளையத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடுகளை இழந்து தவித்து வரும் கூலி தொழிலாளர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கோவை : மேட்டுப்பாளையத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் வீடுகளை இழந்து தவித்து வரும் கூலி தொழிலாளர்களை முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உதகை சாலையில் ஓடந்துரை பகுதியில் ஒரு விவசாய தோட்டத்தில் குடிசைகள் அமைத்து கூலித் தொழிலாளிகள் சிலர் தங்கியிருந்தனர். இதில், ஒரு வீட்டில் கடந்த 4-ம் தேதி எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அங்கிருந்த சுமார் 11 வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன. இதனால், கூலித் தொழிலாளிகள் தங்களது உடைமைகளை இழந்து, வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பங்களை இன்று தி.மு.க. கொள்கை பரப்பு செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ. ராசா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தலா ரூ.5,000 ரொக்கம் மற்றும் சமையல் பாத்திரங்கள், பாய், தலையணை, போர்வை, உணவுப் பொருட்களை வழங்கினார். இந்த நிகழ்வின் போது, கோவை வடக்கு மாவட்ட தி.மு.க செயலாளர் சி.ஆர். ராமச்சந்திரன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...