உடுமலையில் கேரள அரசுப் பேருந்தை மறித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் : 50 பேர் கைது

திருப்பூர் : சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து உடுமலையில் கேரள அரசுப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பூர் : சபரிமலையில் பெண்களை தரிசனம் செய்ய அனுமதித்ததைக் கண்டித்து உடுமலையில் கேரள அரசுப் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இந்து மக்கள் கட்சியைச் சேர்ந்த சுமார் 50 பேர் கைது செய்யப்பட்டனர். 



கேரளாவில் ஆட்சி செய்து வரும் கம்யூனிஸ்ட் அரசு, சபரிமலையில் 2 பெண்களை வழிபாடு செய்ய அனுமதித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சபரிமலையின் புனிதத்தை கெடுத்த கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றும், மத்திய அரசு உடனடியாக கேரள அரசாங்கத்தை கலைக்க உத்தரவிடக் கோரி மூணாறிலிருந்து உடுமலை வந்த கேரளா மாநில அரசு பேருந்தை மறித்து இந்து மக்கள் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்துமக்கள் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இரமணன் தலைமையில் 50 பேரை உடுமலை காவல்துறையினர் கைது செய்தனர். பேருந்து நிலையத்தில் காவலர்கள் அதிகளவில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது. கேரளா செல்லும் பேருந்துகளுக்கு உடுமலை காவல்துறை சார்பில் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...