திருப்பூர் : திருப்பூர் அருகே வலையில் சிக்கிய மரநாய் வனத்துறையினரால் மீட்கப்பட்டு, வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டது.

திருப்பூர் முத்தனம்பாளையம் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த அர்ஜுன். இவருடைய வீட்டின் அருகே தோட்டம் உள்ளதால், பெருச்சாளிகளின் தொந்தரவு அதிகமாக இருந்து வந்தது. இதனையடுத்து, அர்ஜுன் பெருச்சாளிகளை பிடிப்பதற்காக நேற்று இரவு வலை வைத்துள்ளார். இந்த நிலையில், இன்று வலையில் ஏதாவது பெருச்சாளிகள் சிக்கி உள்ளதா..? என்பதைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

அப்போது, வலையில் வித்தியாசமான உயிரினம் இருப்பதைக் கண்டுள்ளார். பின்னர், இது தொடர்பாக, வனத்துறையினருக்கு அவர் தகவல் கொடுத்தார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் வலையில் சிக்கியது, 3 வயது மதிக்கத்தக்க மரநாய் எனத் தெரிவித்தனர். இதையடுத்து, வலையில் இருந்து மீட்கப்பட்ட மரநாயை பாதுகாப்பாக எடுத்துச் சென்று வனத்துறையினர் வனப்பகுதியில் மீண்டும் விடுவித்தனர்.