திருப்பூர் : திருப்பூரில் நண்பர்களுடன் கிணற்றில் குளிக்கச்சென்ற பள்ளி மாணவன் நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்தவர் ராஜசேகரன் (37). இவர் திருப்பூர் செட்டிபாளையம் இந்திரா நகர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். பனியன் தொழிலாளியான இவரது மகன் அன்புச்செல்வன்(12), 7 -ம் வகுப்பு படித்து வருகிறார். இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் அன்புச்செல்வன் தன் நண்பர்களுடன் கிணற்றுக்கு குளிக்கச் சென்றுள்ளார்.
வெங்கமேடு பகுதியில் இருந்த தனியாருக்கு சொந்தமான அந்த பாழடைந்த கிணற்றில் குளிப்பதற்காக சென்ற அன்புச்செல்வனுக்கு நீச்சல் தெரியாது. எனவே, குளிக்க சென்ற இடத்தில் நீரில் மூழ்கியுள்ளார். இதை பார்த்த சக நண்பர்கள் கூச்சலிடவே அருகில் இருந்த பொதுமக்கள் அன்புச்செல்வனை தேடியுள்ளனர். ஆனாலு, அன்பு கிடைக்கவில்லை.

இதனையடுத்து, அவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அனுப்பர்பாளையம் போலீசாரும், தீயணைப்பு படை வீரர்களும் கிணற்றில் மூழ்கிய சிறுவனை சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின்பு சடலமாக மீட்டுள்ளனர். அதன் பின் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.