சபரிமலை விவகாரம் : பாஜக கட்சி வன்முறையைத் தூண்டுவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டம்

திருப்பூர் : கேரளாவின் சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடமிட்டு வன்முறையைத் தூண்டிவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் : கேரளாவின் சபரிமலை விவகாரத்தில் பா.ஜ.க இரட்டை வேடமிட்டு வன்முறையைத் தூண்டிவருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கேரளா சபரிமலை கோவில் சென்று பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்ததைக் கண்டித்து கடந்த இரண்டு நாட்களாக கேரளாவின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை போராட்டங்கள் நடைபெற்று வந்தன. ஆனால், சபரிமலை விவகாரத்தில் வழக்குத் தொடுத்ததும், தீர்ப்பை முதன் முதலில் வரவேற்றதும் பாஜகவினர். இந்நிலையில், தற்போது, அதனை மறுத்து வருகிறது. 



உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபடி சபரிமலை செல்லும் பெண்களுக்குப் பாதுகாப்பு அளித்த கேரள அரசைக் கண்டித்து தொடர் போராட்டங்களில் வேண்டுமென்றே ஈடுபட்டு, வன்முறையை ஏற்படுத்தி வரும் பா.ஜ.க அரசைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திருப்பூர் குமரன் சிலையருகே கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...