அரசு பேருந்தை சேதப்படுத்திய சிவசேனா கட்சிக்காரர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை

திருப்பூர் : சிவசேனாவின் பால்தாக்கரே மரணத்தின் போது அரசு பேருந்தை சேதப்படுத்திய சிவசேனா கட்சியை சேர்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

திருப்பூர் : சிவசேனாவின் பால்தாக்கரே மரணத்தின் போது அரசு பேருந்தை சேதப்படுத்திய சிவசேனா கட்சியை சேர்ந்த இருவருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

கடந்த 2012 -ம் ஆண்டு சிவசேனா கட்சியின் பால்தாக்கரே இறந்தார். அப்போது திருப்பூர் பூளவாடி சுகுமார் நகரில் வசித்து வரும் மகேஷ்குமார் ,மகேந்திரன் ஆகிய இருவரும் வேதாரண்யத்தில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பேருந்தை சேதப்படுத்தினர். காங்கயம் சாலையில் தனியார் உணவக விடுதி அருகே வைத்து நடந்த அச்சம்பவத்தில் பேருந்தின் கண்ணாடியைக் கல் வீசி உடைத்தனர். 

இது தொடர்பாக அரசுப்பேருந்து ஓட்டுநர் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், மகேஷ்குமார், மகேந்திரன் ஆகியோர் மீது தெற்கு காவல் துறையினர் வழக்குப் பதிந்தனர். இந்த வழக்கு 2 -வது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. 



இதையடுத்து, இருவருக்கும் பொது இடத்தில் தகராறு செய்து, ஆபாசமாகப் பேசியதற்காக 3 மாதமும், தமிழக அரசின் பொது சொத்துக்களை சேதப்படுத்தியதற்காக தலா 3 ஆண்டுகளும் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜீயாவுதின் தீர்ப்பளித்தார். மேலும், அவர்களுக்கு தலா ரூ.5000 அபராதமும் விதிக்கப்பட்டது. இதையடுத்து, தெற்கு காவல் துறையினர் இருவரையும் கோவை மத்திய சிறையில் அடைத்தனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...