திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் துங்காவி அரசு உயர்நிலை பள்ளியில் இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் இன்று நடைபெற்றது.

திருப்பூா் மாவட்டம் மடத்துக்குளம் அருகே உள்ள துங்காவியில், மத்திய அரசின் ரீடிங் மிஷன் 2022 -ன் கீழ், துங்காவி அரசு உயர்நிலை பள்ளி மாணவ-மாணவியர்களுக்கு இலவச நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் துங்காவி அரசு உயர்நிலை பள்ளி தலைமையாசிரியர் பஷ்ருன்ஜஹான் தலைமை வகித்தார். துங்காவி கனரா வங்கி கிளை மேலாளர் மீனாட்சி முன்னிலை வகித்தார்.
இந்நிகழ்வினை, துங்காவி கனரா வங்கி, துங்காவி அரசு உயர் நிலைப்பள்ளி, குரு அருள் அறக்கட்டளை, ஆகியோர் இணைந்து வழங்கினர். இதையடுத்து, நிகழ்ச்சியில் பேசிய சுபிக்ஷா ராமலிங்கம், கசாயத்தின் நன்மைகள் குறித்தும் இயற்கை மருத்துவங்களை நம் முன்னோர்கள் அணுகியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வில் ஏராளமான மாணவ,மாணவியர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.