கோவையில் மளிகைக் கடையில் சிகரெட் வாங்குவது போல நடித்து 7 சவரன் தங்க சங்கிலி பறிப்பு

கோவை : செட்டிபாளையம் சாலையில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை : செட்டிபாளையம் சாலையில் உள்ள மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல நடித்து 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

போத்தனூர் செட்டிபாளையம் சாலையில் உள்ள ஆறுபடை நகரைச் சேர்ந்த கணேஷ் பாண்டியனின் மனைவி அமுதா (37). இவரும், இவரது கணவரும் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகின்றனர். நேற்று இரவு 9.30 மணியளவில் அமுதா கடையை மூடுவதற்காகப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் சிகரெட் வாங்குவது போல வந்த மர்ம நபர்கள், அமுதா கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் தங்க சங்கிலியைப் பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அமுதா கூச்சலிட்டார். அருகில் இருந்தவர்கள் வருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக அமுதா போத்தனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் மர்ம நபர்கள் குறித்து அருகே உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை கொண்டு விசாரணை செய்து வருகின்றனர். 



மளிகைக் கடையில் பொருட்கள் வாங்குவது போல சங்கிலி பறிக்கும் கொள்ளையர்களின் அட்டகாசம் கோவையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...