திருப்பூர் : திருப்பூர் அருகே தாய் திட்டியதால் மனமுடைந்த 12-ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் நகராட்சிக்குட்பட்ட கள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின். இவரது கணவர் சகாயராஜ் இவரை விட்டுப் பிரிந்து சென்ற நிலையில், தனது மகன்கள் இருவருடன் தனியாக வசித்து வருகிறார். இவரது இளைய மகன் சார்லஸ் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களாக சார்லஸ் பள்ளிக்கு சரியாக செல்லாமல் இருந்துள்ளதாக தெரிகிறது. இதனை அவரது பள்ளி ஆசிரியர் சார்லஸின் தாயார் ரோஸ்லினை அழைத்துக் கூறியுள்ளார்.
இதனைக் கேட்டு கோபமடைந்த ரோஸ்லின், சார்லசை கடுமையாக திட்டியுள்ளார். இதனால், மனமுடைந்த சார்லஸ், வீட்டில் தனியாக இருக்கும் போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில், சம்பவ இடம் சென்ற பல்லடம் காவல்துறையினர் சார்லஸின் உடலை பல்லடம் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூரில் தாய் திட்டியதால் மனமுடைந்த 12ம் வகுப்பு மாணவன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.