கோவை : இளையதலைமுறையினர் உடல் ஆரோக்கியம் பெற நமது பாரம்பரிய சிறுதானிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என மேட்டுப்பாளையத்தில் நடிகர் சிவக்குமார் மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகையில் நடைபெற்ற விஜயலட்சுமி தனியார் பள்ளியின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட நடிகர் சிவக்குமார் கலந்துகொண்டு மாணவர்களிடம் உரையாற்றினர்.
அப்போது அவர் பேசியதாவது :- இன்றைய தலைமுறை மாணவர்கள் இளைஞர்கள் நவீன கால உணவு முறைகளான பீட்ஷா, பர்க்கர், பாஸ்ஃபுட் போன்ற உணவுகளை உட்கொள்வதால் எவ்வித பயனும் இல்லை. மாறாக, உடலுக்கு அவைகள் கேடுதான். எனவே, இவற்றை தவிர்த்து நமது பாரம்பரிய உணவு வகைகளில் ஒன்றான சிறுதானிய உணவு வகைளான ராகி, கேழ்வரகு, பச்சைபயிறு, தட்டை பயிறு,கம்பு , கொள்ளு போன்ற உணவுகளை உட்கொள்ள வேண்டும். இதன்மூலம், மறந்து போன நமது உணவு முறைகளை மீட்பதுடன், உடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

மேலும், கல்வி பயிலும் மாணவர்கள் அதிகாலையில் எழுந்து சுத்தமான காற்றினை சுவாசித்து படிப்பதுடன், நடைப்பயிற்சியில் ஈடுபட்டால், உடல் ஆரோக்கியம் பேணி பாதுகாப்பதுடன் உற்சாக மனநிலை மட்டுமின்றி, ஆயுட்காலமே அதிகரிக்கும், இவ்வாறு அவர் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
நிகழ்ச்சியின் முடிவில் பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ஓ. ஆறுமுகசாமி, செயலாளர் செந்தில் உட்பட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.