காலை இழந்த அருனிமா அன்டார்டிகாவின் மிக உயர்ந்த வின்சன் சிகரத்தைத் தொட்டு சாதனை

முன்னாள் வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா, தனது ஒற்றைக் காலுடன் அன்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தை ஏறி புதிய சாதனையை நிகழ்த்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார்.

முன்னாள் வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா, தனது ஒற்றைக் காலுடன் அன்டார்டிகாவின் உயர்ந்த சிகரமான வின்சன் சிகரத்தை ஏறி புதிய சாதனையை நிகழ்த்தி பாராட்டுகளைப் பெற்றுள்ளார். 

இந்தியாவை சேர்ந்த அருணிமா சின்ஹா 2013 -ம் ஆண்டு எவரஸ்ட் சிகரத்தைத் தொட்டு சாதனைப் படைத்தார். இந்த சாதனையினை செய்த முதல் மாற்றுத் திறனாளி பெண் அருணிமா ஆவார். இந்நிலையில், தனது 30 -ம் வயதில் அன்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரம் வின்சனைத் தொட்டு மீண்டும் சாதனைப் படைத்துள்ளார். 

ஆனால், இந்த சாதனை சாதாரணமாக நிகழ்ந்துவிடவில்லை. நகை பறிக்கும் கும்பலால் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டு ஒரு காலை இழந்த முன்னாள் வாலிபால் வீராங்கனை அருணிமா சின்கா. தனது ஒற்றைக் காலுடன் அண்டார்ட்டிகாவின் வின்சன் சிகரத்தை ஏறி புதிய சாதனை ஒன்றைச் செய்துள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் அருணிமா சின்கா (25). சிறந்த வாலிபால் வீராங்கனை. கடந்த 2011 -ம் ஆண்டு ஏப்ரல் 12 -ம் தேதி லக்னோவில் இருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தபோது, நகை பறிக்கும் கும்பல் ஒன்று அவரை கடுமையாகத் தாக்கி ஓடும் ரயிலில் இருந்து வெளியே தூக்கி வீசியது.

இந்த விபத்தில் அருணிமா தனது இடது காலை இழந்தார். தன் வாழ்நாளில் எதையாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பில் இருந்த அருணிமா இந்த விபத்தினால் முடங்க தயாராகயில்லை. எவரெஸ்ட் மலையேற்றம் தொடர்பான தகவல்கள், சாதனை வீரர்களைப் பற்றி படித்து தெரிந்துகொண்டு தானும் எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என்று முடிவு செய்தார். 

இதற்கு உதவியாக தனது மூத்த சகோதரர் மற்றும் பயிற்சியாளரின் ஊக்கத்தை மட்டும் எடுத்துக் கொண்டார். இதையடுத்து, உத்தரகாசியில் உள்ள டாடா ஸ்டீல் அட்வென்ச்சர் பவுண்டேசனில் இணைந்து மலையேற்ற பயிற்சி பெற்றார். சரியான பயிற்சிகளோடு எவரெஸ்ட் சிகரத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு சிகரத்தை எட்டினார். இதன்மூலம் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிய முதல் மாற்றுத்திறனாளி இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

இதைப் போலவே, அன்டார்டிகாவின் மிக உயர்ந்த சிகரமான மெளன்ட் வின்சனை தொட்டு தற்போது சாதனைப் படைத்துள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருந்தார். அதற்கு, இந்தியாவின் பிரதமர் மோடி வாழ்த்துகள் தெரிவித்து ரீ - ட்வீட் செய்திருந்தார். 

உலகின் மிக உயரமான சிகரத்தின் மீது ஏற நம்பிக்கை ஒன்றே போதுமானது, இரண்டு கால்கள் அவசியமில்லை என நிரூபித்துள்ளார் அருணிமா சின்கா. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...