கோவையில் ' சோல்ஃபுல் ஜேர்னி ' என்ற புத்தகம் வெளியீடு

கோவையில் ' சோல்ஃபுல் ஜேர்னி ' என்ற புத்தகம் வெளியீடு



கோவை : இளைஞர்களுக்காக எழுதப்பட்ட ' சோல்ஃபுல் ஜேர்னி ' என்ற புத்தகம் கோவையில் நேற்று வெளியிடப்பட்டது. 



கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் இந்தப் புத்தகத்தை வெளியிட்டார். இளைஞர்களுக்கான எழுதப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் சிம்ரன் வாஹன் எழுதியுள்ளார். இது இந்து மற்றும் புத்த மதங்களின் சடங்குகள், விளக்கப்படங்கள் மற்றும் ஓவியங்கள் வண்ணங்களால் தீட்டப்பட்டுள்ளது. 



இந்த நிகழ்ச்சியில் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியைச் சேர்ந்த சங்கர் வனவராயர் பேசுகையில், "நமது வாழ்க்கையில் உள்ள அழுத்தங்களைக் குறைக்கும் மருந்தாக ஓவியங்கள் உள்ளன. ஓவியங்கள் வெறும் மருந்தாக மட்டுமல்ல, சிறந்த முடிவுகளையும் எடுக்க வழிவகை செய்கிறது. ஓவியங்கள் வண்ணம் தீட்டப்பட்டிருப்பதால், குழந்தைத் தனமாக இருக்கும் இளைஞர்கள் பலர் கூறினாலும், நமது குழந்தைப் பருவம் மற்றும் வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை இந்தப் புத்தகம் நினைவுபடுத்தும்," இவ்வாறு கூறினார். 

இதேபோல, கவிஞர் ஸ்ரீவிதியா சிவக்குமார் பேசுகையில், "கடந்த சில ஆண்டுகளாக வண்ணங்கள் நிறைந்த புத்தகத்தை கேட்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது, வண்ணப் புத்தகங்கள், இளைஞர்களின் வாழ்க்கையில் இருக்கும் அழுத்தங்களைக் குறைக்க உதவிகரமாக இருக்கும்," என்றார். 

"வண்ணங்களுடன் தியானம் செய்தால் மனதை ஒருநிலைப்படுத்த முடியும். பல்வேறு எண்ணங்களுடன் அலைந்து திரியும் நமது எண்ணங்களை, வண்ணங்கள் மூலமாக சீராக்கலாம்," என்கிறார் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன்.



' சோல்ஃபுல் ஜேர்னி ' குறித்து பேசிய எழுத்தாளர் சிம்ரன் வாஹன், எனது புத்தகத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி சுதந்திரத்தையும், தும்பி எனது குழந்தைப் பருவத்தையும் நினைவூட்டுவதாக அமைவதாகக் கூறினார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...