கோவை : சுகுணா கல்யாண மண்டபத்தில் தொடங்கிய புளோ பஜார் கண்காட்சியை எஸ்.எஸ்.வி.எம். பள்ளி குழுமங்களின் தலைவர் டாக்டர். மணிமேகலை மோகன் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பெண் தொழில் முனைவோரை உருவாக்குவதில் பிக்கி அமைப்பு முக்கிய பங்காற்றி வருகிறது. குறிப்பாக, அவர்களுக்கு தொழில் பயிற்சி அளிப்பதுடன் மார்க்கெட்டிங் துறையில் அவர்கள் சிறந்து விளங்குவதற்கான பிரத்யேக பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, பெண் தொழில்முனைவோர் வலைப்பின்னலை உருவாக்கப்படுகிறது. இதற்காக, ஆண்டுதோறும் ப்ளோ பஜார் என்ற நிகழ்வு கோவையில் நடத்தப்படுகிறது.
8-வது ஆண்டாக நடப்பாண்டில் நடைபெறும் இந்த ப்ளோ பஜார் நிகழ்வு சிறு மற்றும் குறு பெண் தொழில் முனைவோருக்கு சிறந்த களமாக அமைகிறது. இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, வாடிக்கையாளர்களுடன் நல்லுறவை வளர்க்கின்றனர் பெண் தொழில்முனைவோர். இத்தகைய சிறப்பு வாய்ந்த ப்ளோ பஜார் இன்று முதல் 2 நாட்களுக்கு நடைபெறுகிறது. இந்தக் கண்காட்சி கோவை அவிநாசி சாலையில் உள்ள சுகுணா கல்யாண மண்டபத்தில் காலை 10 மணிக்கு தொடங்கி, இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது. இந்தப் பஜாரில் அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்கலாம். நுழைவுக் கட்டணம் எதுவும் வசூலிக்கப்படுவதில்லை.

இந்தப் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட ஸ்டால்களில் மகளிர் பேஷன் ஆடைகள், சாரீஸ், குழந்தைகளுக்கான ஆடைகள், விலை உயர்ந்த ஆபரணங்கள், பெட், ஃபர்னிச்சர்ஸ், பெயின்டிங், இயற்கை சார்ந்த பானங்கள், அழகு சாதனங்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. நடப்பாண்டில் முதல் முறையாக இந்தப் பஜாரில் இயற்கை சார்ந்த உணவுகளுக்கான ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் ஆதரவு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கண்காட்சியில் உடனடியாக, உணவுத் தயாரித்து வழங்கக் கூடிய ஸ்டால்களும் உள்ளன. நடப்பாண்டில் இக்கண்காட்சி கோவை விழாவுடன் இணைந்து நடைபெறுவது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று தொடங்கிய இந்தக் கண்காட்சியை கோவை எஸ்.எஸ்.வி.எம். பள்ளி குழுமங்களின் தலைவர் டாக்டர். மணிமேகலை மோகன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியை ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார். அப்போது, பிக்கி புளோ தலைவர் ஜெயந்தி மனோகரன், கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் வனஜா ராம்ராஜ், கோவை விழா குழுவினர் ரமேஷ், லட்சமி, குர்பீர் சிங் மற்றும் பிக்கி புளோ அமைப்பின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.