நீலகிரி : உதகை தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகை பொங்கல் பண்டிகைக்குள் திறக்க வாய்ப்பிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுற்றுலா நகரமான உதகை சுற்றுலா பயணிகளைக் கவரும் வகையில் தாவரவியல் பூங்காவில் கண்ணாடி மாளிகையை அமைத்துள்ளது. இதற்குள் மலர்செடிகள், பெரணி தாவரங்கள் மற்றும் கள்ளிச்செடிகளை வைக்கப்பட்டுள்ளன. மலர்கள் இல்லாத சமயத்தில் கண்ணாடி மாளிகையில் வைத்துள்ள மலர் அலங்காரங்களையே சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த 20 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்ட கண்ணாடி மாளிகை முற்றிலும் சேதம் அடைந்தது. அவ்வப்போது கண்ணாடிகளும் விழ ஆரம்பித்தன.

இதனால், கடந்த 3 ஆண்டுக்கு முன் அந்த கண்ணாடி மாளிகை பூட்டப்பட்டது. மேலும், அங்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்தக் கண்ணாடி மாளிகையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 20 ஆண்டுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த கண்ணாடி மாளிகையை முழுமையாக அகற்றிவிட்டு புதிதாக கண்ணாடி மாளிகை ரூ. 2 கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
கடந்த மே மாதம் மலர்கண்காட்சியை தொடங்கி வைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வந்த நிலையில், இந்த கண்ணாடி மாளிகை அவசரகதியில் திறக்கப்பட்டது. ஆனால், அந்த மாதமே பெய்த மழைக்கு இந்த கண்ணாடி மாளிகை தாங்கவில்லை. ஆங்காங்கே ஒழுக ஆரம்பித்து, கண்ணாடி மாளிகை குளம்போல் காட்சியளித்தது. இதனைதொடர்ந்து, கண்ணாடி மாளிகை மீண்டும் மூடப்பட்டது.

இந்த நிலையில், மீண்டும் இந்த கண்ணாடி மாளிகையில் சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக கண்ணாடிகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மழை பெய்தால் ஒழுகாமல் இருக்க பக்கவாட்டில் பசைகள் போடும் பணியும் நடந்து வருகிறது. பொங்கல் விடுமுறைக்கு முன்னதாக சீரமைப்பு பணிகளை முடித்து, கண்ணாடி மாளிகையை திறக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்