திருப்பூர் : விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடுமலை திருமூர்த்தி அணையில் இருந்து மூன்றாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் உடுமலை திரிமூர்த்தி அணை 60 அடி கொள்ளளவு கொண்டது. தற்போது, அணையில் 52.97 அடி நீர்மட்டம் உள்ளது. திரிமூர்த்தி அணைக்கு பரம்பிகுளம் அணையிலிருந்து கான்டூா் கால்வாய் வழியாக, தண்ணீர் கொண்டு வந்து திரிமூர்த்தி அணையை நிரப்புவது வழக்கம். தற்போது, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை கடுமையாக பொழிந்ததன் காரணமாக, பரம்பிகுளம் அணையிலிருந்து உபரிநீா் வினாடிக்கு 840 கனஅடி வீதம் திருமூா்த்தி அணைக்கு திறந்து விடப்பட்டது.
இதேபோல், திருமூா்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஏற்பட்ட காட்டாற்று வெள்ளப்பெருக்கு காரணமாகவும், திருமூா்த்தி அணை நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. பி.ஏ.பி. பாசன விவசாயிகள் மூன்றாம் மண்டலத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசுக்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக கோரிக்கை விடுத்தனர். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று திருமூர்த்தி அணையிலிருந்து மூன்றாம் மண்டல பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.
அதன்படி, இன்று பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் மகேந்திரன் மற்றும் பொதுப்பணிதுறை அதிகாரிகள் அணையிலிருந்து வினாடிக்கு 950 கனஅடி வீதம் தண்ணீர் திறந்தனர். இதனால், பி.ஏ.பி. மூன்றாம் மண்டல பாசனத்தில் 94,521 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனவசதி பெறும்.