கோவை : அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு துடியலூர் ஆஞ்சநேயர் கோவிலில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஒவ்வொரு ஆண்டும் மார்கழி மாதம் அமாவாசை மூலநட்சத்திரத்தில், ஆஞ்சநேயர் அவதரித்த நாளான இன்று அனுமன் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு கோவில்களில், அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் துடியலூரை அடுத்துள்ள ஜெங்கமநாயக்கன்பாளையம் அருள்மிகு நவாம்ஸ ஸ்ரீ சஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோவில் அமைந்துள்ளது. இங்கு 8– ம் ஆண்டு அனுமன் ஜெயந்தி விழா கோலாகலமாக இன்று கொண்டாடப்பட்டது. புதியதாக செய்யப்பட்ட சிறப்பு ராஜமாருதி தங்ககவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். துடியலூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை வழிபட்டனர்.