சபரிமலையில் இதுவரை 10 இளம்பெண்கள் தரிசனம் : கேரளா போலீஸ் தகவல்

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, சபரிமலையில் இதுவரை 10 இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, சபரிமலையில் இதுவரை 10 இளம்பெண்கள் சுவாமி தரிசனம் செய்திருப்பதாக கேரளா போலீசார் தெரிவித்துள்ளனர். 



சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சுவாமி தரிசனம் செய்யலாம் என உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பளித்தது. இதையடுத்து, சபரிமலையை நோக்கி பெண்கள் படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில், கடந்த வாரம் கேரளாவைச் சேர்ந்த 2 பெண்கள் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதனால், கடும் கொந்தளிப்படைந்த கேரளாவைச் சேர்ந்த இந்து அமைப்புகளும், பா.ஜ.க.வும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது. இதனால், பதட்டமான நிலையே தொடர்கிறது. 



பெண்கள் தரிசனம் செய்ததற்கு எதிராக போராட்டங்கள் நடந்து வந்த நிலையில், இலங்கையைச் சேர்ந்த சசிகலா (46) என்ற பெண் தனது கணவர் சரவணன் மற்றும் மகனுடன் சபரிமலைக்கு வந்தார். இருமுடிக்கட்டுடன் வந்த அவரை மரக்கூட்டம் பகுதியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், அவர் மருத்துவச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை காண்பித்து குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்ததாக கேரளா போலீசார் தெரிவித்தனர். 

இந்த நிலையில், உச்சநீதிமன்ற அனுமதிக்குப் பின் சபரிமலையில் 10 இளம் பெண்கள் தரிசனம் செய்துள்ளதாக கேரள போலீஸ் தகவல் தெரிவித்துள்ளது. தீர்ப்பு செயல்படுத்தப்பட்டது பற்றி உச்சநீதிமன்றத்தில் கேரளா அரசு தெரிவிக்கும் என்றும், மேலும், பல இளம் பெண்கள் சன்னிதானத்துக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக கேரள போலீஸ் தெரிவித்துள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...