நீலகிரி : உதகையை அடுத்த காஷ் மந்து பகுதியில் பழங்கால முறைப்படி பாரம்பரிய நடனத்துடன் கூடிய தோடர் இன மக்களின் வில், அம்பு திருமண சாஸ்திர நிகழ்ச்சி நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் கோத்தர், இருளர், குறும்பர், தோடர் என பல்வேறு மலைவாழ் இன மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த மக்கள் 21-ம் நூற்றாண்டிலும் தங்கள் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் இன்றும் மாறாமல் கடைபிடித்து வருகின்றனர். இந்த மலைவாழ் மக்களின் கோவில் திருவிழாக்களும், திருமணங்களும் பழங்கால பாரம்பரியபடியே நடந்து கொண்டிருப்பதும் ஆச்சரியமான ஒன்று தான்.

இதில், தோடர் இன மக்கள் தங்களது திருமணம் மற்றும் வளைகாப்பும் அவர்கள் முன்னோர்களின் வழிப்படி இன்றும் கடைபிடித்து வருகின்றனர். மணமகனை வனப்பகுதிக்கு அழைத்து சென்று பூ சங்கரா என்ற இயற்கை செடியை கொண்டு வில், அம்பு செய்து ஊர்வலமாக வந்து தங்களது முன்னோர்களை தெய்வமாக வழிபட்டு மணமகளுக்கு வில், அம்பை அளிக்கின்றனர்.

நேற்று நடைபெற்ற வில், அம்பு சாஸ்திரம் நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மந்து பகுதிகளில் உள்ள அனைத்து தோடர் இன மக்களும் கலந்து கொண்டு, மணமகன் மற்றும் மணமகளை வாழ்த்தினர். பின்னர், அவர்களது பாரம்பரிய நடனத்துடன் வில், அம்பு திருமண சாஸ்த்திர நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், மணமகன் உதில் குட்டன், தனது துணையான ஜெயஸ்ரீ-க்கு வில், அம்பு வழங்கி தன்னுடைய வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொண்டார். இந்த திருமண நிகழ்ச்சியின் தோடர் இனத்தைச் சேர்ந்த மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.