கோவை : மேட்டுப்பாளையத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீட்டில் இருந்த சிலிண்டர்கள் வெடித்துச் சிதறியதில் அருகில் இருந்த 10 -க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் எரிந்து நாசமானது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில், ஓடந்துறை என்னுமிடத்தில் தனியாருக்குச் சொந்தமான வாழை விவசாய தோட்டம் உள்ளது. அங்கு கூலி தொழிலாளர் குடும்பங்கள் 10 -க்கும் மேற்பட்ட குடிசைகள் அமைத்து தங்கியுள்ளனர். இந்த வீடுகளில் வசிப்போர் பகல் நேரங்களில் அருகிலுள்ள சாலையோரங்களில் தள்ளு வண்டியில் ஆடைகள் விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், அங்கு தங்கியிருந்தவர்கள் அனைவரும் இன்று காலை தங்களது வழக்கமான பணிகளுக்கு சென்றிருந்த சமயத்தில், ஒரு குடிசை வீட்டில் திடீரென சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. அந்த தீ மள மளவென அருகில் பரவி மற்ற குடிசைகளும் எரியத் தொடங்கின. அதன் பின்னர் அந்த வீடுகளில் இருந்த சிலிண்டர்களும் வெடித்துச் சிதறின.

இது குறித்து தகவலறிந்து விரைந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி தீயை கட்டுக்குள் கொண்டு வர முயன்றனர். ஆனால், அதற்குள் அனைத்துக் குடிசைகளும் முற்றிலும் எரிந்து சேதமானது. மேலும், வீடுகளில் இருந்த பணம், நகைகள் மற்றும் துணிகள் என அனைத்துப் பொருட்களும் கருகி நாசமானது. இச்சம்பவம் குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.