கோவையில் களைகட்டும் "ஈட் ஸ்ட்ரீட்" உணவு திருவிழா : ருசிக்க குவியும் மக்கள்

கோவை: கோவை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஓட்டல்கள் சங்கம் நடத்தும் "ஈட் ஸ்ட்ரீட்" உணவு திருவிழா கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.


கோவை: கோவை விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மாவட்ட ஓட்டல்கள் சங்கம் நடத்தும் "ஈட் ஸ்ட்ரீட்" உணவு திருவிழா கொடிசியா மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

11 -வது கோவை விழா இன்று தொடங்கி வரும் 12-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், போட்டிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் இந்த விழாவில் இடம்பெறுகின்றன.



இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட ஓட்டல்கள் சங்கம் நடத்தும் "ஈட் ஸ்ட்ரீட்" என்ற உணவு திருவிழா இன்று தொடங்கியது. வரும் 6-ம் தேதி வரை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் இந்த உணவு திருவிழாவை இன்று மாலை 5 மணிக்கு கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் மற்றும் காவல் ஆணையர் சுமித்சரன் ஆகியோர் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தனர்.

கோவையைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட உணவகங்கள் இதில் கலந்து கொண்டு ஸ்டால்கள் அமைத்துள்ளனர். இதனுடன் தினமும் குழந்தைகளுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



உணவு திருவிழாவுக்கு தற்போது முதலே பொதுமக்களின் வருகை அதிகரித்துள்ளது.



Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...