தேசிய மருத்துவ ஆணையம் மசோதாவை கைவிடக் கோரி கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

கோவை : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கோவை : இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு பதிலாக, தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றும் மத்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு பேட்ஜ் அணிந்து மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய மருத்துவ கவுன்சிலுக்குப் பதிலாக, தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கான மசோதாவை எதிர்த்துப் போராட மருத்துவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் கோவை மாவட்ட தலைவர் வினோத் ராஜ்குமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். 



இது குறித்து வினோத் ராஜ்குமார் பேசுகையில், "இந்திய மருத்துவ கவுன்சில் நீக்கப்பட்டு தேசிய மருத்துவ ஆணையமாக மாற்றுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதேபோல், வாடிக்கையாளர் பாதுகாப்பு சட்டத்தில் மருத்துவ துறையை இணைப்பது மருத்துவ துறை சார்ந்த நிபுணர்கள் ஆலோசனை இல்லாமல், நீதிபதிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் முறை மிகப்பெரிய முறைகேட்டுக்கு வழிவகுக்கும்.

மேலும், மருத்துவ சிகிச்சையின் விலை அதிகரிப்பதால் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படும். இதனால் முதலுதவி செய்வதிலும், அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். இந்த மசோதாவால் பொதுமக்கள் தான் பாதிக்கப்படுவார்கள். நீதிபதிகள், வழக்கறிஞர்கள், காவல்துறையினர், மருத்துவர்கள் கொண்ட மருத்துவ தீர்ப்பாயம் மாவட்ட, மாநில, தேசிய அளவில் கொண்டு வருவதே இதற்கு தீர்வு ஆகும் என்றனர்.

இதனைத் தொடர்ந்து, மக்களவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மாநிலங்கவையில் நிறைவேற்ற முயற்சி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, அதை தடுக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தான் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.

இந்த போராட்டத்தை மத்திய அரசு பரிசீலிக்கவில்லை எனில் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபடவும் திட்டமிட்டுள்ளோம். மருத்துவ சிகிச்சையில் 70 சதவிகிதம் சிறு, நடுத்தர மருத்துவமனை உள்ளதால், அம்மருத்துவமனை உறுப்பினர்கள் அடங்கிய குழுவின் கோரிக்கையை இதுபோன்ற நடவடிக்கைகளின் போது மத்திய அரசு கேட்க வேண்டும்," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...