கோவை கடைகளில் சோதனை : 1759.5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

கோவை : கோவையில் 2189 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1759.5 கிலோ எடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை : கோவையில் 2189 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 1759.5 கிலோ எடையில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி பகுதியில் மண்டல சுகாதார அதிகாரிகள், அலுவலர்கள் ஜனவரி 1 -ம் தேதி முதல் 4 -ம் தேதி வரை ஓட்டல்கள், கடைகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அதன்படி, வடக்கு மண்டலப் பகுதியில் 463 கடைகளில் விதிமீறி வைத்திருந்த, 215 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து, ரூ.1 லட்சத்து 58 ஆயிரம் மதிப்பிலான அபராதம் விதிக்கப்பட்டது. 



இதைப் போலவே, தெற்கு மண்டலத்தில் 532 கடைகளில் நடைபெற்ற சோதனையில் 301.5 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.13,200 மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. கிழக்கு மண்டலத்தில் 354 கடைகளில் நடைபெற்ற சோதனையில் 239 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.18,500 மதிப்பில்அபராதம் விதிக்கப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து ,மேற்கு மண்டலத்தில் 673 கடைகளில் நடைபெற்ற சோதனையில் 649 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ18, 350 மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. மத்திய மண்டலத்தில் 167 கடைகளில் நடைபெற்ற சோதனையில் 355 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ரூ.22,360 மதிப்பில் அபராதம் விதிக்கப்பட்டது. 

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்ததாவது ;- அனைத்து மண்டலங்களிலும் கிட்டத்தட்ட 2189 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் 1759.5 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.2 லட்சத்து 30 ஆயிரத்து 410 மதிப்பில் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...