முத்ரா கடன்களை விரைந்து வழங்க நடவடிக்கை கோரி அருண் ஜெட்லியிடம் திருப்பூர் எம்.பி. நேரில் மனு

டெல்லி : விசைத்தறி நல மேம்பாட்டுக்காக முத்ரா கடன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தினார்.

டெல்லி : விசைத்தறி நல மேம்பாட்டுக்காக முத்ரா கடன்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை நேரில் சந்தித்து திருப்பூர் எம்.பி சத்தியபாமா வலியுறுத்தினார்.



 

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 5,000-க்கும் மேற்பட்ட விசைத்தறி கூடங்களில் 1 லட்சம் தொழிலாளர்கள் தினசரி அடிப்படையில் வேலை பெற்று வருகின்றனர். வேளாண்மைக்கு அடுத்து விசைத்தறி துறை முக்கியமானதாகத் திகழ்கிறது. சுமார் 3 லட்சம் பேருக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் வழங்கி வருகிறது. பிரதம மந்திரி முத்ரா திட்டம் மூலமாக ஒரு லட்சம் ரூபாய் மானியத்துடன் விசைத்தறி துறைக்கு வழங்கப்படும் கடன்களை இத்துறை பெற்று பயன்பெற்று வருகிறது. விசைத்தறி துறைக்கும் இந்த மானியத்துடன் கூடிய கடன் உதவி திட்டம் தொடரப்படும் என்ற அறிவிப்பு நல்ல ஊக்கமாக அமைந்துள்ளது. 

ஆனால், முத்ரா திட்டத்தின் கீழ், கடன் கோரி விண்ணப்பிக்கப்படும் மனுக்களை ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பான்மையான வங்கிகள் ஏற்க மறுக்கின்றன. உதாரணத்திற்கு, விசைத்தறி அமைப்பின் 65 உறுப்பினர்கள் முத்ரா திட்டக் கடன் கோரி ஆன்லைன் மூலமாக விண்ணப்பித்தனர். நீண்ட நடவடிக்கைகளுக்குப் பிறகு தொடர் முயற்சிகளின் பலனாக இருவர் மட்டுமே கடன் பெற முடிந்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் குழுவுடன் நடந்த சந்திப்பின் போதும், இது பற்றிய புகார்கள் கூறப்பட்டன. அவர்கள் இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண உறுதி கூறியுள்ளனர். 

ஈரோடு மாவட்டத்தில் சுமார் 5 ஆயிரம் விசைத்தறி உரிமையாளர்கள் முத்ரா மூலமாகக் கடன் கோரி மனுக்களை அளித்தனர். ஆனால், இதுவரை வெறும் 12 பேர் மட்டுமே கடன் பெற்றுள்ளனர். 

இதைத் தொடர்ந்து, வங்கி மேலாளர்களும், மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் மற்றும் ஆணையத்திடமிருந்து, மானியத்துடன் முத்ரா கடன் வழங்க எவ்வித அறிக்கையும் வரவில்லை என மறுத்துள்ளனர். எனவே, விசைத்தறி துறையினரின் இந்த கோரிக்கையை மனிதாபிமானத்துடன் பரிசீலனை செய்து விசைத்தறி துறை சார்ந்தவர்களுக்கு எந்தவித சிரமமும் இன்றி முத்ரா திட்டக் கடன்கள் கிடைக்கத் தேவையான அறிவுறுத்தல்களை வங்கிகளுக்கு அமைச்சர் அளிக்க வேண்டும், இவ்வாறு அவர் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...