திருப்பூரில் ரயில் பயணிகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

திருப்பூர் : ரயில்வே விபத்துகளைக் குறைப்பது மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

திருப்பூர் : ரயில்வே விபத்துகளைக் குறைப்பது மற்றும் ரயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்றது.

திருப்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே கூடுதல் காவல்துறை இயக்குனர் சைலேந்திர பாபு கலந்துகொண்டார். இதனைத் தொடர்ந்து ரெயில்வே போலீசார் சார்பில் வெளியிடப்பட்டுள்ள மொபைல் செயலியைப் பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்கிக் கூறினார். இந்நிகழ்ச்சியில் மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 



பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் ,"கடந்த ஆண்டு ரயில் விபத்துக்களில் 2572 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் 600 பேரின் அடையாளங்கள் இதுவரை கண்டறியப்படவில்லை. அதே போல் ரயில் நிலையங்களில் 2242 குழந்தைகள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இது போன்ற குற்றச் சம்பவங்கள் மற்றும் விபத்துக்களை தவிர்த்திடவே ரயில்வே காவல்துறையால் செயலி வெளியிடப்பட்டுள்ளது. 



ரயிலில் பயணிக்கும் அனைவரும் அந்த செயலியைப் பயன்படுத்தி ஆபத்து நேரத்தில் தகவல் அளிக்க வேண்டும். மேலும், தமிழகத்தின் அனைத்து ரயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்துவது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது," என்றார். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...