திருப்பூரில் சாலை பாதுகாப்பு குறித்து நடித்துக் காட்டிய திருநங்கைகள்

திருப்பூர் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு வாகன ஓட்டிகள் ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என திருநங்கைகள் நடித்துக் காட்டினர்.


திருப்பூர் : சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வை முன்னிட்டு வாகன ஓட்டிகள் ஹெல்மட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து வாகனத்தை ஓட்ட வேண்டும் என திருநங்கைகள் நடித்துக் காட்டினர். 



திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரோட்டரி மெட்டல் டவுன் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சென்னை ராயல் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. திருப்பூர் புஷ்பா தியேட்டர் சாலை முன் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் விழிப்புணர்வை ஏற்படுத்தத் திருநங்கைகள் கலந்து கொண்டனர். 

இதையடுத்து, திருநங்கைகள் ஒன்றிணைந்து வாகன ஓட்டிகள் இருசக்கர வாகனத்தை ஹெல்மட் அணிந்து வாகனங்களை ஓட்ட வேண்டும், அதே போல் கார் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணிந்து காரை ஓட்ட வேண்டும் என அறிவுரை வழங்கினர். இந்நிகழ்வில் மாநகர காவல் ஆணையர் மனோகரன், மாநகர துணை காவல் ஆணையர் உமா, ரோட்டரி கிளப் நிர்வாகிகள், திருநங்கைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். 



இதனிடையே, விழிப்புணர்வு நிகழ்வில் கலந்து கொண்ட திருநங்கைகள், பாதுகாப்பான பயணம் குறித்து நடனம் மற்றும் பாடல் மூலம் நடித்து காட்டியது வாகன ஓட்டிகளை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...