உதகையில் காபி மகசூல் அதிகரிப்பு : விவசாயிகள் இரட்டிப்பு மகிழ்ச்சி

நீலகிரி : உதகை அருகேயுள்ள எப்பநாடு பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி : உதகை அருகேயுள்ள எப்பநாடு பகுதியில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு காபி மகசூல் அதிகரித்து உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 



நீலகிரி மாவட்டத்தில் தேயிலைக்கு அடுத்தபடியாக மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இதில், உதகை மற்றும் குந்தா வட்டாரங்களில் மட்டும் காய்கறி விவசாயம் அதிகமாக மேற்கொள்ளப்படுகிறது. கூடலூர், பந்தலூர், உதகை, குன்னூர் மற்றும் குந்தா போன்ற பகுதிகளில் சில இடங்களில் காபி பயிரிடப்படுகிறது. காபியை பொறுத்தவரை அறுவடை காலம் அதிகம் என்பதால், இதனை பயிரிட விவசாயிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். 



பெரும்பாலான விவசாயிகள் தாங்கள் சொந்த உபயோகத்திற்காகவும், சிலர் விற்பனைக்காகவும் பயிரிடுகின்றனர். காபி மகசூல் அதிகரித்தால், அதிக லாபம் கிடைக்கும். இந்த நிலையில், நீலகிரி மாவட்டத்தில் நான்கு மாதங்களுக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்தது. இதனால், தேயிலை தோட்டங்கள், மலை காய்கறி மற்றும் காபி தோட்டங்கள் பசுமையாக மாறின. மேலும், உதகை அருகேயுள்ள எப்பநாடு, சின்னக்குன்னூர் போன்ற பகுதிகளில் உள்ள காபி தோட்டங்களில் மகசூல் அதிகரித்துள்ளது. 



மேலும், சிலர் தேயிலை பயிர்களுக்கு நடுவே ஊடுபயிராக காபி பயிரிட்டுள்ள நிலையில், தேயிலை மற்றும் காபி மகசூல் அதிகரித்துள்ளது. பல ஆண்டுகளுக்குப் பிறகு உதகை மட்டுமின்றி, நீலகிரி மாவட்டம் முழுவதும் காபி விளைச்சல் அதிகரித்துக் காணப்படுகிறது. காபி கிலோ ஒன்று ரூ.150 முதல் ரூ. 200 வரை விலை போவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...