சிங்காநல்லூரில் கம்யூனிஸ்ட் கட்சி கொடிக்கம்பங்கள் சேதம் : சி.பி.எம். சி.பி.ஐ. கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டம்.

கோவை : கோவையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்கள் நேற்றிரவு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : கோவையில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பங்கள் நேற்றிரவு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சிகள் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என அண்மையில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இத்தீர்ப்பை அனைத்து பெண்கள் அமைப்பு மற்றும் முற்போக்காளர்களும் வரவேற்றனர். ஆனால், இந்த தீர்ப்பிற்கு ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. உள்ளடங்கிய சங்பரிவார அமைப்புகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகிறது. ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துவது மாநில அரசின் கடமை எனக் கூறி, கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேரள மாநில முதலமைச்சர் பினராயி விஜயன், சபரிமலை செல்லும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டார்.



இதனிடையே, கடந்த புதன்கிழமை அதிகாலையில் இரண்டு பெண்கள் சபரிமலைக்குச் சென்று ஐயப்பனை தரிசித்து திரும்பினர். இதனைக் கண்டித்து நேற்று கேரள மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதில் இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து, அங்கு பதட்டமான சூழல் நிலவியது. 

இந்த நிலையில், நேற்று மாலை கோவை வரதராஜபுரம் பகுதியில் இரண்டு இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிமரங்களை இந்து அமைப்பைச் சேர்ந்தவர்கள் வெட்டி சாய்த்துள்ளனர். இதேபோல, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக் கம்பத்தையும் வெட்டி சேதப்படுத்தியதுடன், கட்சிக் கொடியையும் தீ வைத்து எரித்து உள்ளனர்.

இது குறித்த தகவல் அறிந்த மார்க்சிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு இருவரைப் பிடித்து சிங்காநல்லூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இச்செயலில் ஈடுபட்டவர்கள் வி.எச்.பி., அமைப்பைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்தது. 



இதையடுத்து, கட்சியின் கொடிக் கம்பங்களை சேதப்படுத்திய செயலைக் கண்டித்து கோவை வரதராஜபுரத்தில் சி.பி.எம். சி.பி.ஐ. கட்சிகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னதாக, இந்த ஆர்ப்பாட்டத்தில் சி.பி.எம். மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, மாநில குழு உறுப்பினர்கள் சி.பத்மநாபன், எம். கண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் ஆறுமுகம் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, இந்துத்துவா அமைப்புகளின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்து முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...