கோவை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் சாலைப்பணியாளர்கள் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் (unskilled labour) பெறா ஊழியர்களுக்கான ஊதியம் ரூ. 5,200 மற்றும் ரூ 20,200 வழங்கிட வேண்டும். சாலைப் பணியாளர்களுக்கான நிரந்தர ஊதியம் தொகுப்பிலிருந்து ஊதியம் வழங்கிட வேண்டும், சாலை பராமரிப்பு பணியினை தனியார் பராமரிக்க வழங்கிய ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் ஆகியவை இவர்களின் பிரதான கோரிக்கையாகும்.

இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை திருச்சி சாலை அருகே நெடுஞ்சாலை துறை அலுவலகத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இது குறித்து அச்சங்கம் கோவை கோட்டத் தலைவர் முருகேசன் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் கீழ் உள்ள நெடுஞ்சாலை துறையில் இவ்வளவு பிரச்சனைகள் இருக்கின்றன. இதனை முதலமைச்சர் கண்டுகொள்வதில்லை. இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக் கோரிக்கை நிறைவேற்றாவிட்டால் தண்டோரா போட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம்," என்றார். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...