இன்று முதல் ஆரம்பமானது கோவை விழா : 12-ம் தேதி வரை கோவை மக்களுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

கோவை : 11-வது கோவை விழாவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் இன்று தொடங்கி வைத்தனர்.

கோவை : 11-வது கோவை விழாவை மாநகராட்சி ஆணையர் கே. விஜயகார்த்திகேயன் மற்றும் காவல் ஆணையர் சுமித் சரண் இன்று தொடங்கி வைத்தனர். 



'தாக்கம் மற்றும் ஊக்கம்' என்பதை மையமாக வைத்து நடத்தப்படும் 11-வது கோவை விழா இன்று முதல் வரும் 12-ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது. 11-வது கோவை விழா கொண்டாடப்படும் நாட்களில் நூற்றுக்கும் மேற்பட்ட அமைப்புகளால், பொதுமக்களுக்காக புதுவிதமான, விநோதமான நிகழ்ச்சிகள் உள்பட 126 நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 



 

கோவை மக்கள் மற்றும் மாணவர்களிடையே தாக்கம் மற்றும் ஊக்கத்தை ஏற்படுத்தும் வகையில், கோவை விழாவின் ஒரு பகுதியாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி கொடிசியாவில் வரும் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களின் 270-க்கும் மேற்பட்ட அறிவியல் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகிறது.

மேலும், ஜனவரி 6-ம் தேதி மாலை கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் 33 கலாச்சார அமைப்புகள் ஒன்றிணைந்து கலாச்சார அணிவகுப்பை மேற்கொள்கின்றன. இதேபோல, கடந்த ஆண்டு நடந்த் கோவை விழாவில், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற 'ஸ்டீரிட் ஃபுட்' என்ற உணவுத் திருவிழா, இந்த முறை 'ஈட் ஸ்டீரிட்' என்ற பெயரில் நடத்தப்படுகிறது. கொடிசியா மைதானத்தில் இன்று முதல் 6-ம் தேதி வரை நடக்கும் இந்த உணவுத் திருவிழாவில், கோவையில் பிரபலமான உணவகங்கள் கலந்து கொண்டு, தங்களது பிரத்யேக உணவு வகைகளை மக்களுக்கு தயார் செய்து கொடுக்கிறது. 

கோவை விழாவில் கடந்த 10 ஆண்டுகளில் இடம்பெறாத பொங்கல் விழா கொண்டாட்டம் இந்த முறை இடம்பெற்றுள்ளது. கோவை விமான நிலையத்தில் அதற்கான, ஏற்பாடுகள் செய்யப்பட்டு, திறந்தவெளி திரையங்கு மூலம் திரைப்படங்கள் காணும் நிகழ்ச்சியும் அரங்கேறுகிறது. வரும் 9-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை இரவில் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் படங்களை திரையிட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

வரும் 12 மற்றும் 13ஆம் தேதிகளில் ரேஸ்கோர்ஸ் சாலையில் கோவை ஸ்டீரிட் ஆர்ட் திருவிழா நடக்கிறது. 'ஓவிய சந்தை' என்ற பெயரில் நடக்கும் இந்த நிகழ்ச்சியின் மூலம், அந்த சாலைகளில், நாடு முழுவதும் உள்ள 60-க்கும் மேற்பட்ட சிறந்த ஓவியர்களால், பல்வேறு வண்ண ஓவியங்கள் தீட்டப்படுகிறது. சுகுணா கலையரங்கில் 12-ம் தேதி வினாடி வினா போட்டிகள் நடத்தப்படுகிறது. 

 

ஆட்டோமெஷன் மீது ஆர்வம் கொண்டவர்களுக்காக வரும் 12-ம் தேதி ப்ரோஷோன் மாலில் பழங்காலத்து கார்களின் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், கோவை மியூசிக் திருவிழா, கோவை ஸ்போர்ட்ஸ் திருவிழா ஆகியவை 11-வது கோவை விழாவின் சிறப்பம்சம் கொண்ட நிகழ்ச்சிகளாகும்.



கோவை மாநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்ற இரண்டடுக்கு பேருந்து (டபுள் டக்கர்) கோவை விழாவின் சின்னமாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில், இன்று தொடங்கிய 11-வது கோவை விழாவின் ஒரு பகுதியாக, இரண்டடுக்கு பேருந்து சேவையும் தொடங்கப்பட்டுள்ளது. இதில், பொதுமக்கள் ஆர்வத்துடன் ஏறி பயணம் செய்து வருகின்றனர். மேலும், பொதுமக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதமாக, வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் மேலும் ஒரு இரண்டடுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. 



www.coimbatorevizha.com என்ற இணையதள முகவரியிலோ அல்லது கோவை விழா என்ற செயலியை பதிவிறக்கம் செய்தோ, நிகழ்ச்சிகளின் விபரங்கள் மற்றும் இடம் குறித்து அறிந்து கொள்ளலாம். மேலும், கோவை விழாவின் அதிகாரப்பூர்வ செயலின் மூலம் இரண்டடுக்கு பேருந்துக்கான டிக்கெட்டைப் பெற்றுக் கொள்ளும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...