வன விலங்குகள் நடமாட்டத்தை உதகை நெடுஞ்சாலையில் கட்டுப்படுத்த புற்களை அகற்றும் பணி தீவிரம்

கோவை : வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சாலையோர புற்களை தேடி மேய்ச்சலுக்கு வரும் காட்டு யானைகள், தடுக்கும் வகையில், மேட்டுப்பாளையம் - நீலகிரி மலைப்பாதையோரங்களில் வளர்ந்து நிற்கும் புற்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.


கோவை : வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி சாலையோர புற்களை தேடி மேய்ச்சலுக்கு வரும் காட்டு யானைகள், தடுக்கும் வகையில், மேட்டுப்பாளையம் - நீலகிரி மலைப்பாதையோரங்களில் வளர்ந்து நிற்கும் புற்களை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 



கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை மற்றும் கோத்தகிரி செல்லும் சாலைகள் இரண்டும் மலை சார்ந்த அடர்ந்த வனத்தை ஊடுருவியே செல்கிறது. சாலையின் இருபுறமும் காடுகள் என்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவோ, விலங்குகளைப் புகைப்படங்கள் எடுப்பதோ, அவற்றுக்கு உணவுப் பொருட்கள் வீசுவதோ தடை செய்யப்பட்டுள்ளது. 

கோவை - நீலகிரி மாவட்டங்களை இணைக்கும் போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலையில் தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில், அவ்வப்போது யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் இந்த சாலைகளை கடந்து செல்வதும் வழக்கம். இவ்வாண்டு போதிய அளவு மழைப்பொழிவு இருந்ததாலும், கடந்த சில நாட்களாக இப்பகுதியில் சாரல் மழை பெய்த காரணத்தினாலும், சாலையோரங்களில் புற்கள் நன்கு வளர்ந்து விட்டன. சாலையின் இரு பக்கமும் இரண்டடி வரை வளர்ந்து விட்ட இந்த பசுமையான புதுப்புற்களை உண்ண காட்டு யானைகள் விரும்புவதால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

வனத்தில் உள்ள செடி, கொடிகள் மற்றும் மரக்கிளைகளை உடைந்து தீவனமாக கொள்ளும் யானைகள், சுவையும், நீர்சத்தும் அதிகமுள்ள இப்புற்களை உண்ண சாலையோரங்களில் சுற்றித் திரிக்கின்றன. புல் மற்றும் அருகில் உள்ள சிறு சிறு செடிகளை மேய்ந்தபடி யானைகள் நிற்பதால், இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் ஆழ்ந்து விடுகின்றனர். சில நேரங்களில் சாலையை முற்றிலுமாக யானைகள் மறித்தபடி நிற்பதால் போக்குவரத்து தடைப்படுகிறது. சிலர் யானைகள் நிற்கும் போதே, ஆபத்தான வகையில் வாகனத்தை வேகமாக செலுத்தி அவற்றின் அருகிலேயே கடந்து செல்கின்றனர். 

இதுபோன்ற நடவடிக்கைகள் கடும் விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் வனத்துறையினரின் வேண்டுகோளின்படி தற்போது சாலையோர புற்களை அகற்றும் பணியினை நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். மோட்டார் பொருத்தப்பட்ட கருவிகள் மூலம் 20-க்கும் மேற்பட்டோர் சாலையின் இருபுறமும் வளர்ந்து நிற்கும் புற்கள் மற்றும் செடிகளை அகற்றி வருகின்றனர். இவ்வழியே, பயணிப்பவர்களின் பாதுகாப்பு கருதி சாலையோரங்கள் சீர் செய்யப்பட்டு வருவதாக நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...