கோவை : தூமனூர் மலைக்கிராமத்தில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள், இன்னும் 2 மாதங்களுக்குள் கட்டி முடிக்கப்படும் நிலையில் உள்ளது.

கோவை மாநகரில் இருந்து 28 கிலோ மீட்டர் தொலைவில் தூமனூர், செம்புக்கரை மற்றும் காட்டுச்சாலை ஆகிய 3 மலைக் கிராமங்கள் உள்ளன. தடாகம் வனக் கோட்டத்திற்குட்பட்ட இந்தப் பகுதிகளில் மொத்தம் 127 ரேசன் அட்டைகளைக் கொண்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் கூட்டுக் குடியிருப்பு திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ள நிலையில், தூமனூர் மலைக் கிராமத்தில் கடந்த 2016-ம் ஆண்டு 42 பசுமை வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், மேலும் 2 பயனாளிகள் இந்தத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டனர்.

பசுமை வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் ரூ. 2.1 லட்சம் பயனாளிகளுக்கு பல்வேறு கட்டங்களாக நேரடியாக வழங்கப்படும். கடந்த 2016-ம் ஆண்டு பசுமை வீட்டுப் பணிகளுக்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை ஒரு வீடு கூட கட்டி முடிக்காதது மலை கிராம மக்களை வேதனைக்குள்ளாக்கியது.
பெரும்பாலான வீடுகள் மேற்கூரை இல்லாமலும், ஒருசில வீடுகள் பேஸ்மென்ட் மட்டுமே போடப்பட்டுள்ள நிலையில் இருந்தது. மேலும், பலர் குடியிருப்புகளை காலி செய்துவிட்டு, அருகில் உள்ள உறவினர்களின் வீடுகளில் குடியேறியுள்ளனர். உரிய நேரத்தில் வீடுகள் கட்டிக் கொடுக்காததால் அவர்கள் பெருத்த இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

முன்னதாக, இத்திட்டம் தாமதமாவது குறித்து கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., வி.சி. ஆறுக்குட்டி சிம்ப்ளிசிட்டியிடம் கூறிய போது, "கிராம மக்கள் உரிய ஒத்துழைப்பு வழங்கும்பட்சத்தில் இத்திட்டம் விரைந்து முடிக்கப்படும்," எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தூமனூர் மலைக்கிராமத்தில் 44 பயனாளிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகள், இன்னும் 2 மாதங்களுக்குள் கட்டி முடிக்கும் நிலையை எட்டியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிவேலைகள் கூட முடியாமல் பரிதாப நிலையில் காட்சியளித்து வந்த வீடுகளில், தற்போது 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. தற்போது, சிறுசிறு பணிகளே எஞ்சியுள்ளன.
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "ஊழியர்கள் கிராமத்திலேயே தங்கி கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு தேவைப்படும் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. இன்னும் 2 மாதங்களில் பணிகள் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. பின்னர், பயனாளிகளுக்கு வீடுகளை அரசு வழங்கும்," என்றனர்.

ஆரம்பத்தில் தாமதமாக பணிகள் நடந்து வந்தாலும், தற்போது தூமனூர் கிராமத்தில் பசுமை வீடுகளின் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. இதனிடையே, கூடுதல் கலெக்டர் (பயிற்சி) ஸ்நேகா நேற்று தூமனூர் பகுதிக்கு நேரில் சென்று கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டார். அப்போது, கட்டுமான ஊழியர்களுக்கு சிறப்பு தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்க நடவடிக்கை எடுத்தார்.