கோவை : சிங்காநல்லூர் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கொடி மற்றும் கொடி கம்பங்களை மர்ம நபர்கள் சேதப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வரதராஜபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடிக்கம்பம் உள்ளது. இதன் அருகே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் ரத்த தான கழக அறிவிப்பு பெயர் பலகை உள்ளது. நேற்று இரவு மர்மநபர்கள் சிலர், இந்தக் கொடி கம்பத்தை கீழே சாய்த்து, அதிலிருந்த கட்சியின் கொடியை எடுத்து எரித்துள்ளனர். மேலும், அருகே இருந்த ரத்த தான கழகத்தின் பெயர் பலகையையும் கீழே சாய்த்துள்ளனர்.

அதேபோல், சிங்காநல்லூர் காமராஜர் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு சொந்தமான கொடிக்கம்பத்தை கீழே சாய்க்கப்பட்டு, அதிலிருந்த கட்சி கொடியும் எரிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்துள்ளது. எனவே, இதனை ஒரே நபர்கள்தான் செய்திருக்கக் கூடும் என சந்தேகிக்கப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதியைச் சேர்ந்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு திரண்டனர். மேலும், நிகழ்விடத்திற்கு வந்த பீளமேடு மற்றும் சிங்காநல்லூர் போலீஸார், இந்த சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 2 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். சபரிமலை விவகாரத்தின் எதிரொலியாக கம்யூனிஸ்டுகளின் கொடிக் கம்பங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.