திருப்பூர் : சபரிமலைக்கு பெண்கள் சென்றதை கண்டித்தும் அதற்கு காரணமான கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் திருப்பூரில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்றதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது .
திருப்பூர் : சபரிமலைக்கு பெண்கள் சென்றதை கண்டித்தும் அதற்கு காரணமான கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தியும் திருப்பூரில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் - இந்து முன்னணியின் ஆர்ப்பாட்டத்திற்கு அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்றதற்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சபரிமலைக்கு நேற்றைய தினம் இரண்டு பெண்கள் சென்றதை கண்டித்து கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாநகராட்சி எதிரே இந்து முன்னணியின் சார்பில் அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் கலந்துகொண்டவர்கள் சபரிமலையின் புனிதம் மற்றும் மத நம்பிக்கையை கெடுக்கும் வகையில் செயல்பட்டு வரும் கம்யூனிஸ்ட் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அரசு பள்ளி மாணவர்களை அழைத்துச்சென்ற இந்து முன்னணி
இந்து முன்னணி ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக திருப்பூர் மாநகரின் பல்வேறு அரசுப்பள்ளிகளில் இருந்து மாணவர்களை சரக்கு வாகனத்தில் அழைத்து வந்து ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற செய்தனர். மத நல்லிணக்கத்தோடு செயல்பட கற்றுக்கொடுக்கும் பள்ளிகளில் இருந்து இதுபோன்ற மாணவர்களை மத நம்பிக்கையிலான ஆர்ப்பாட்டத்திற்கு அழைத்து செல்வது அவர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படுவதாகவும், இதனை பள்ளிக்கல்வித்துறை மற்றும் மாநில அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்திய மாணவர் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.


