ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை : கோத்தகிரியைச் சேர்ந்த 4 பேர் கைது

நீலகிரி : கோத்தகிரியில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்

நீலகிரி : கோத்தகிரியில் ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரியை விற்பனை செய்த நான்கு பேரை போலீசார் இன்று கைது செய்தனர்

கோத்தகிரி பஜார் பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, எஸ்.ஐ. நாகராஜ் மற்றும் போலீசார், பேருந்து நிலையம், ராம்சந்த் ஆகிய இடங்களில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு சிலர் ஒரு துண்டு சீட்டில் ஏதோ எழுதி செல்வதைப் பார்த்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, ஆன்லைன் மூலம் தடை செய்யப்பட்ட லாட்டரி வாங்கியது தெரிந்தது.

இதைதொடர்ந்து, ரகசியமாக லாட்டரி சீட்டு விற்பனை செய்த கோத்தகிரியைச் சேர்ந்த ராஜ்குமார் (50), அப்துல் ஜாபர் (54) ரங்கராஜ் (66), மோகன்தாஸ் (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து ரூ. 1,64,000-ஐ மற்றும் 6 செல்போன்களை கைப்பற்றினர். பின்னர், அவர்கள் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...