குன்னூரில் குடிபோதையில் மினி பேருந்தை இயக்கிய ஓட்டுநர் கைது

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரியில் குடிபோதையில் மினி பேருந்தை இயக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி : மலை மாவட்டமான நீலகிரியில் குடிபோதையில் மினி பேருந்தை இயக்கிய ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். 

நீலகிரி மாவட்டம் பல்வேறு மலை கிராமங்களைக் கொண்டுள்ளது. இந்த கிராமங்களை இணைக்கும் சாலைகள் குறுகலானது. இதில், சாதாரணப் பேருந்துகளை இயக்குவது கடினம். எனவே, குன்னூரில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட மினி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை ஓட்டுப்பட்டரை, வண்டிச்சோலை, ஜெகதளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த மினி பேருந்தை நம்பி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் நாள்தோறும் பயணித்து வருகின்றனர்.



இந்த நிலையில், ஜெகதளா செல்லும் மினி பேருந்தின் ஓட்டுநர் செல்வா என்பவர் மது அருந்திவிட்டு பேருந்தை இயக்குவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது, இதனைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர்கள் பாலு, ரவி மற்றும் முதன்மை காவலர் சுரேஷ் ஆகியோர் மினி பேருந்து ஓட்டுநரை பிடித்து சோதனை மேற்கொண்டனர். அதில், அவர் மது அருந்தியிருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், மினி பேருந்தை பறிமுதல் செய்த காவல் ஆய்வாளர் டி. சுப்ரமணி, ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார்.

மேலும், ஓட்டுனர் உரிமம் இல்லாதவரிடம் மினி பேருந்தை ஓட்ட அனுமதி அளித்த அதன் உரிமையாளர் மீதும் வழக்கு தொடரவுள்ளதாக காவல் ஆய்வாளர் சுப்ரமணி தெரிவித்தார். ஜெகதளா போன்ற மிகவும் செங்குத்தான சாலையில் மினி பேருந்தை இயக்கிய ஓட்டுனர் குடிபோதையில் இருந்தது, அந்தக் கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தியது.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...