திருப்பூா் : உடுமலையில் லஞ்சம் வாங்கும் போது பிடிபட்ட வட்டார வளா்ச்சி அலுவலரிடம் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூா் மாவட்டம், உடுமலை ஒன்றிய அலுவலகத்தில், அரசின் நலத்திட்டங்களைச் செயல்படுத்துவதில் முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் ஏழைகளுக்கு வழங்கப்படும் தொகுப்பு வீடுகள் ஆகியவற்றிற்காக பொதுமக்களிடம் அதிகளவில் லஞ்சம் பெற்று வருவதாகவும், ஊராட்சி பகுதிகளில் வீட்டுமனைகளுக்கு அங்கீகாரம் வழங்க பணம் பெற்றுக் கொண்டு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில், தாராபுரத்தை சேர்ந்த சென்ட்ரிங் ராஜேந்திரன் என்பவா் தனது வீட்டுமனைக்கு அங்கீகாரம் வழங்கக் கோரி விண்ணப்பித்துள்ளார். அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலா் ரமேஸ் குமார் ரூ.15 ஆயிரம் லஞ்சம் தந்தால் அங்கீகாரம் வழங்குவதாகக் கூறியுள்ளார். இதையடுத்து, ராஜேந்திரன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினரிடம் புகாரளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ராஜேந்திரனுக்கு ஆலோசனை அளித்துள்ளனர். அதன்படி, இன்று ரசாயனம் தடவிய பணம் ரூ.15 ஆயிரத்தை ராஜேந்திரனிடம் கொடுத்து அனுப்பினர். அதனை ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் ரமேஸ்குமாரிடம் கொடுக்கும் போது கையும் களவுமாக பிடித்தனர்.
இந்த ஆப்ரேசனில், லஞ்ச ஒழிப்புத்துறை துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் ஆய்வாளர் கௌசல்யா தலைமையில் 5 போ் கொண்ட குழு ரமேஸ் குமாரை விசாரணை செய்து வருகின்றனர்.