உதகையில் துப்புரவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முற்றுகைப் போராட்டம்

நீலகிரி : உதகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர்.

நீலகிரி : உதகை நகராட்சியில் பணிபுரியும் துப்புரவு பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் மனு அளித்தனர். 

உதகை நகராட்சி நிர்வாகம் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய விடுமுறை சரண்டர் பயனை உடனடியாக வழங்கிட வேண்டும். 2014 -ல் வழங்கப்பட வேண்டிய ஸ்பெசல் கிரேடு, செலக்சன் கிரேடு மற்றும் சூப்பர் கிரேடுகளை உடனடியாக வழங்கிட வேண்டும்.



மேலும், தொழிலாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்த வருங்கால வைப்பு நிதி தொகையினை நகராட்சி நிர்வாகம் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் செலுத்தாததால் பி.எப்., கடன் வாங்க முடியாத நிலை உள்ளது. இதனால் பணி ஓய்வு பெறும் போது வருங்கால வைப்பு நிதி சரியாக கிடைப்பதில்லை. நிரந்தர பணியில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்திட வேண்டும். ஆட்சியர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை ஒப்பந்த ஊழியர்களுக்கு வழங்கிட வேண்டும்.

குறிப்பாக, ஒப்பந்த ஊழியர்களுக்குக் கையுறை, காலணி மற்றும் சீருடை உட்பட அனைத்து பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும். பணியின் போது ஏற்படும் விபத்தில் காயமடையும் ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு உட்பட அனைத்துச் செலவினங்களையும் நிர்வாகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். 



மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்திற்கு சங்கத்தலைவர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். இதையடுத்து, காவல் ஆய்வாளர் கமலகண்ணன் கூறும் போது போராட்டம் நடத்துவதற்கு எவ்விதமான அனுமதியும் இல்லை. எனவே, 10 பேர் மட்டும் நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து மனு அளிக்கலாம். 

இதனை மீறி போராட்டம் நடத்தினால் கைது செய்வோம் எனத் தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் சுமார் 10 -க்கும் மேற்பட்டோர் நகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து மனு அளித்தனர். இதனை முன்னிட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...