கோவை : ஒண்டிப்புதூர் மேம்பாலத்தின் கீழ் உள்ள கடைகளில் மர்ம நபர்கள் அடுத்தடுத்துள்ள கடைகளின் பூட்டை உடைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் ஒண்டிபுதூர் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் கடந்த சில மாதங்களாகவே, தொடர்ந்து குற்ற சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதில் கொலை, கொள்ளைக் குற்ற சம்பவங்களும் அடங்கும். இதனால் இந்த பகுதியில் கவல்துறை வாகனத்தணிக்கையை தீவிரப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில், இன்று அதிகாலை பாலத்திற்கு அடியில் உள்ள 8 -க்கும் மேற்பட்ட கடைகளின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, அந்த பகுதியில் இருந்த மளிகைக் கடை ஒன்றில் நுழைந்த கொள்ளையர்கள் கடையிலிருந்து ரூ.4 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துள்ளனர்.
இதே போலவே, இருசக்கர வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடையிலிருந்து ரூ.5 ஆயிரம், பெட்டிக் கடை ஒன்றை உடைத்து ரூ.2 ஆயிரம் மற்றும் ஒரு கடையில் ரூ.3 ஆயிரம் என கொள்ளையடித்துள்ளனர். இதைத் தொடர்ந்து டாஸ்மாக் மதுபானக் கடையில் இரண்டு பூட்டுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து, இன்று காலை அவ்வழியே சென்ற சிலர் அடுத்தடுத்து கடைகள் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்து, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஒருநாளில் நடந்த இந்தத் தொடர் கொள்ளைத் தொடர்பாக சிங்காநல்லூர் குற்றபிரிவு போலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.