திருப்பூர் : அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், அரசு அலுவலகங்களையும் வெடி வைத்து தகர்க்கப்போவதாக கடிதம் அனுப்பிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருப்பூர் காவல்நிலையத்தில் புகாரளித்தார்.

அவர் தெரிவித்த மர்ம கடிதத்தில் கூறியிருப்பதாவது :- ஊத்துக்குளி சாலை மண்ணரை செக் போஸ்ட் அருகில் தனியார் வணிக வளாகத்தில் கிளப் என்ற பெயரில் அனைத்து குற்றச் செயல்களும் நடைபெற்று வருகிறது. இரவு 10 மணிக்கு மேல் வெட்டு ஆட்டம், கஞ்சா விற்பனை, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மொத்தமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்த சூதாட்ட விடுதியில் ஈடுபட்டு பணத்தை இழந்த திருப்பூர் கொங்கு நகரைச் சேர்ந்த மகேஷ் என்பவர் குடும்பத்தில் பிரச்சனையாகி தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சூதாட்ட விடுதிதான் காரணம்.
இதுகுறித்து பலமுறை காவல்துறையினருக்கு புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. காவல்துறை இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை எனில், திருப்பூர் மற்றும் மாநகர் பகுதிகளில் இயங்கி வரும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளையும், அரசு அலுவலகங்களையும் வெடி வைத்து தகர்ப்போம் என்று இறுதி எச்சரிக்கையாக தெரிவித்து கொள்கிறோம், இவ்வாறு அதில் எழுதப்பட்டிருந்தது.
அந்த கடித்ததின் மேல் அனுப்புநர் முகவரியில், எம்.ஷாகுல் அமீது, தந்தை பசீர், 111 ஊத்துக்குளி மெயின்ரோடு, மண்ணரை, திருப்பூர் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கடிதம் மண்ணரை பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளியின் முகவரி எழுதப்பட்டு அனுப்பப்பட்டிருந்ததால், பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் இன்று திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனையடுத்து, அந்தக் கடிதத்தினை அனுப்பியது யார்..?, கடிதத்தில் குறிப்பிட்டுள்ளபடி அப்பகுதியில் தனியார் கிளப் செயல்பட்டு வருகிறதா..? என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.