மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட வேதிப்பொருளின் அளவு அதிகம் : நெஸ்லே நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புதல்

டெல்லி : நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருப்பதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.

டெல்லி : நெஸ்லே நிறுவனத்தின் மேகி நூடுல்ஸில் அனுமதிக்கப்பட்ட அளவை விட வேதிப் பொருளின் அளவு அதிகமாக இருப்பதாக அந்நிறுவனம் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. 

நெஸ்ட்லே நிறுவன தயாரிப்பான மேகி நூடுல்ஸில் அளவுக்கு அதிகமாக மோனோசோடியம் க்ளூட்டமேட் மற்றும் ஈயம் இருப்பதை உத்தரபிரதேச மாநில உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகம் கண்டுபிடித்தது. இதையடுத்து நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக காரீயம் இருந்ததால், நெஸ்லே நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மேகி நூடூல்ஸ்க்கு தடை விதிக்கப்பட்டது.

பாதுகாப்பற்ற உணவுப் பொருளான மேகியை முறையற்ற வகையில் விற்பனை செய்ததற்காக 'நெஸ்லே இந்தியா' நிறுவனம் ரூ. 640 கோடியை இழப்பீடாக தரவேண்டும் என்று மத்திய அரசு வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில், இன்றைய விசாரணையின் போது, நெஸ்லே நிறுவனத்தின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் வாதாடுகையில், தங்களது நிறுவனத்தின் தயாரிப்பான மேகியில் ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகமாக இருப்பதை ஒப்புக் கொண்டார். இதைத் தொடர்ந்து, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் உண்ணும் உங்களது தயாரிப்பில் உருவாகும் மேகி நூடுல்ஸில், வேதிப்பொருளை அனுமதிக்கப்பட்ட அளவே ஏன் சேர்க்கக் கூடாது எனவும் நீதிபதிகள் கேட்டனர். 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...