கோவை : கோவை மாவட்டம் நவ இந்தியா அருகே அதிவேகமாக வந்த டீசல் லாரி மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர் சம்பவ இடத்திலே பலியானார்.

கோவை, சித்தாபுதூரை சேர்ந்தவர் சந்தோஷ் (44), நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் இன்று காலையில் அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா அருகேயிருந்து லட்சுமிமில்லுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது Tn 33 AM 7556 என்ற எண் கொண்ட டீசல் டேங்கர் லாரி, சந்தோஷ் மீது மோதியது.

இதையடுத்து, அவர் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் லாரியின் பின் சக்கரம் சந்தோஷின் தலையில் ஏறியது. இதனால் சந்தோஷ் அணிந்திருந்த ஹெல்மெட் நொறுங்கியது. மேலும், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவம் குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே, அவினாசி சாலையில் பேருந்துகளும் லாரிகளும் அதிவேகமாகச் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக அந்தப் பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.