பிளாஸ்டிக் தடையால் மவுசு கூடிய மஞ்சப்பைகள் : மகிழ்ச்சியில் திருப்பூர் தொழிலாளர்கள்

திருப்பூர் : பிளாஸ்டிக் தடையால் மஞ்சப்பை ஆர்டர்கள் குவிவதால் திருப்பூர் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் : பிளாஸ்டிக் தடையால் மஞ்சப்பை ஆர்டர்கள் குவிவதால் திருப்பூர் உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

மனிதர்களுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பிளாஸ்டிக் பொருட்கள் தீங்கு விளைவிக்கிறது. எனவே, ஜனவரி 1 -ம் தேதி முதலாக தமிழகத்தில் 14 வகையான  பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தத் தமிழக அரசு தடை விதித்தது. இத்தடை அமலுக்கு வந்துள்ளதால், அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றான பொருட்களை மக்களும், வியாபாரிகளும் நாடத் தொடங்கியுள்ளனர். 



இதையடுத்து, அன்றாட தேவையான பாலீத்தீன் பைகளுக்கு மாற்றாகத் துணிப்பை முதலிடத்தைப் பெற்றுள்ளது. விலை மலிவு என்ற காரணத்தினால், சில வருடங்களாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பாலீத்தீன் பைகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. இதனால், முந்தைய காலக் கட்டத்தில் அபிரிமிதமான பயன்பாட்டில் இருந்த மஞ்சப்பை கலாச்சாரம் வழக்கொழிந்து இருந்தது. 



இந்நிலையில், தற்போது பிளாஸ்டிக் தடையால் மீண்டும் மஞ்சப்பைக்கு மவுசு கூடியுள்ளது. இதையடுத்து, திருப்பூரில் ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள் தயாரித்து வந்த நிறுவனங்கள் கூட தற்போது  துணிப்பைகளை தயாரிக்கும் ஆர்டர்களை பெற்று மும்முரமாக உற்பத்தி பணிகளை முடுக்கி விட்டுள்ளனர். தொடர்ந்து ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளதால் இரவு, பகலாகப் பணிகள் நடைபெற்று வருகிறது. 



இதனைக் குறித்து திருப்பூர் வியாபாரிகள் கூறும் போது கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக முறையான பணிகளின்றி தவித்து வந்த தொழிலாளர்களுக்கு சீரான பணி மற்றும் ஊதியம் கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், நிரந்தரமாக துணிப் பைகள் ஆர்டர்கள் வரும் எனவும் நம்புகிறோம். தொடக்க விலையாக ரூ.6 முதல் கிடைக்கும் துணிப்பைகள் நல்ல தரமான முறையில் தயாரிக்கப்படுகிறது. எனவே, மறு பயன்பாட்டுக்கு பல முறை பயன்படுத்தலாம்.

மேலும், இவற்றை காட்டன் காடா துணிகள் கொண்டு தயாரிப்பதால் அதிக எடையைத் தாங்குவதுடன், எளிதில் மண்ணில் மக்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கும். நிச்சயமாகச் சுற்றுச்சூழலுக்கு ஏற்றதாக அமையும் எனத் தெரிவித்தனர்.  

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...