ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 மதிப்பில் பொங்கல் பரிசு : ஆளுநர் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.


பொங்கலை முன்னிட்டு ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்தார்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தமிழக சட்டமன்றத்தில் உரையாற்றினார். அப்போது அவர் மத்திய அரசின் பல்வேறு திட்டங்களை விளக்கினார். இதனிடையே, அவர் பொங்கல் பரிசாக ரூ.1000 ரேஷன் அட்டை வைத்துள்ள அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.  

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் பன்வாரிலால் உரையாற்றியதாவது பொங்கல் பரிசாக திருவாரூர் மாவட்டம் தவிர பிற மாவட்டங்களில் ஒவ்வொரு குடும்பத்துக்கு ரூ.1000 வழங்கப்படும். திருவாரூரில் தேர்தல் நடைபெறவுள்ளதால் இங்கு மட்டும் பணம் வழங்கப்படாது. ஸ்டெர்லைட் விவகாரத்தில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து அரசு மேல் மூறையீடு செய்யும். 

தொழில்முனைவோரை ஊக்கப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். புதிய தொழில் முனைவோரை ஊக்குவிக்க புதிய தொழில் கொள்கைகள் உருவாக்கப்படும். சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் குடிசைகளை மேம்படுத்த புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. 

மேலும், அடுத்த தலைமுறைக்கான மின்சார வாகனங்களைத் தயாரிக்க, சலுகைகள் வழங்க அரசு பரிசீலித்து வருகிறது. பாதுகாப்புத் தளவாட உற்பத்திக்கு புதிய தொழிற்கொள்கை விரைவில் வெளியிடப்படும். தூய்மை இந்தியா திட்டம் அனைத்து இடங்களுக்கும் கொண்டு சேர்க்கப்பட வேண்டும். பழங்குடியினரின் எழுத்தறிவு குறைவாக உள்ளதால், அவர்களுக்காக புதிய பள்ளிகள் கட்டப்பட உள்ளது,. இவ்வாறு அவர் பேசினார். 

மேலும், இத்தொகை வரும் 7 -ம் தேதி முதல் ரேசன் கடைகள் மூலம் குடும்பதாரர்களிடம் கையெழுத்து பெறப்பட்டு வழங்கப்படும் எனத் தெரிகிறது. 

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...