நீலகிரி : கேரளாவில் பெண்கள் ஐயப்பன் தரிசனம் செய்த விவகாரத்தினால் நடைபெறும் பந்த் காரணமாக, பாதுகாப்பு கருதி நீலகிரியில் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன.

சபரிமலையில் பெண்கள் கோவிலுக்குள் சென்ற சம்பவம் காரணமாக இன்று கேரளாவில் முழு அடைப்பு நடைபெறுகிறது. இதனை ஆதரிக்கும் விதமாக நீலகிரி மாவட்டம் கூடலூரில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் என்ற பெயரில் இந்து அமைப்புகள் கடை அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.

இதையடுத்து, கூடலூர் பஜாரில் கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. மேலும், நீலகிரி மாவட்டத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு அரசுப் பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனிடையே, உள்ளூர் அரசுப் பேருந்துகள் வழக்கம் போல இயக்கப் படுகின்றன. கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.